ஒரு வீரரை மட்டும் 20 கோடிக்கு ஏலத்தில் எடுத்த காவ்யா மாறனின் சொத்து மதிப்பு! வெளியான தகவல்
ஐபிஎல் கிரிக்கெட்டில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் (Sunrisers Hyderabad) அணியின் இணை உரிமையாளர் காவ்யா மாறன், கடந்த ஏப்ரல் மாதம் 9ஆம் திகதியன்று இணையத்தில் மிகவும் பரபரப்பாக பேசப்பட்டார்.
ஐபிஎல்லில் வைரல்
இதற்கு காரணம் தொடர்ச்சியாக அவரை கமெராமேன் படம் பிடித்ததால், அவர் கடுப்பானதால் தான். எனினும் காவ்யா மாறன் அமைதி காத்ததால் பார்வையாளர்களின் ஈர்ப்பு அவர் மீது ஏற்பட்டது.
சன்ரைசர்ஸின் CEO ஆகவும் உள்ள காவ்யா மாறன், தமிழ்நாட்டின் முக்கியமான அரசியல் குடும்ப பின்புலம் கொண்டவர் என்பது அனைவரும் அறிந்தது தான்.
ஆனாலும், ஐபிஎல் ஏலத்தில் கலந்துகொண்டதன் மூலம் அவர் வைரலானார்.
சன்ரைசர்ஸின் CEO
Sun Group நிறுவனர் கலாநிதி மாறனின் மகளான காவ்யா மாறன், 2018ஆம் ஆண்டில் சன்ரைசர்ஸ் அணியின் CEO ஆக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
சென்னையில் பட்டப்படிப்பை முடித்த காவ்யா மாறன், லண்டனில் உள்ள Warwick Business Schoolயில் MBA படித்தார்.
அதன் பின்னரே தனது தந்தையுடன் Businessயில் களமிறங்கினார். அவர் பொறுப்பேற்ற ஆண்டே சன்ரைசர்ஸ் அணி Final வரை சென்றது.
ஆச்சரியப்பட வைத்த ஏலம்
இந்த நிலையில், துபாயில் நடந்த மினி ஏலத்தில் பாட் கம்மின்ஸை (அவுஸ்திரேலிய கேப்டன்) ரூ.20.50 கோடிக்கு எடுத்து அனைவருக்கும் காவ்யா அதிர்ச்சி கொடுத்தார்.
அதேபோல், உலகக்கோப்பை இறுதிப் போட்டியில் அவுஸ்திரேலிய அணியின் வெற்றிக்கு முக்கிய காரணமாக அமைந்த டிராவிஸ் ஹெட்டையும் ஏலத்தில் எடுத்து காவ்யா மாறன் அசர வைத்தார்.
Screengrab/JioCinema
தற்போது காவ்யா மாறனின் சொத்து மதிப்பு ரூ.409 கோடி என்பது தெரிய வந்துள்ளது. ஜன் பாரத் டைம்ஸின் தரவுகள் வெளிப்படுத்தியுள்ளது.
அதேபோல், அவரது தந்தை கலாநிதி மாறன் ரூ.19,000 கோடி சொத்து மதிப்புடன் உள்ளார் என்றும் கூறப்பட்டுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |