52 ரன்னில் சுருண்ட அணி! நொறுக்கிய மார்க்ரம் படை
தென் ஆப்பிரிக்க டி20 லீக் தொடரில், சன்ரைசர்ஸ் ஈஸ்டர்ன் கேப் அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் பிரிட்டோரியா கேபிடல்ஸ் அணியை வீழ்த்தியது.
பார்ட்மேன் அபாரம்
SA20 தொடரின் 15வது போட்டி செயின்ட் ஜார்ஜ் பார்க் மைதானத்தில் நடந்தது. இதில் எய்டன் மார்க்ரம் தலைமையிலான சன்ரைசர்ஸ் ஈஸ்டர்ன் கேப் அணியும், வெய்ன் பர்னெல் தலைமையிலான பிரிட்டோரியா கேபிடல்ஸ் மோதின.
நாணய சுழற்சியில் வென்ற சன்ரைசர்ஸ் அணி பந்துவீசியது. அதன்படி களமிறங்கிய பிரிட்டோரியா அணியில் விக்கெட்டுகள் மளமளவென சரிந்தன.
@Cricbuzz
சன்ரைசர்ஸ் வெற்றி
அதிரடி வீரர்களான சால்ட் (10), வில் ஜேக்ஸ் (12), ரோஸோவ் (1), இங்கரம் (1) ஆகியோர் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். பின்னர் வந்த வீரர்களும் பார்ட்மேன், ஓரல் பந்துவீச்சில் இரட்டை இலக்கை ரன்னை எடுக்கமுடியாமல் நடையை கட்டினர்.
@SA20/Sportzpics
இதனால் பிரிட்டோரியா அணி 13.3 ஓவரில் 52 ஓட்டங்களுக்கு சுருண்டது. பார்ட்மேன் 4 விக்கெட்டுகளும், ஓரல் 3 விக்கெட்டுகளும், ஜென்சென் 2 விக்கெட்டுகளும் கைப்பற்றினர்.
பின்னர் ஆடிய சன்ரைசர்ஸ் அணி 6.5 ஓவரில் 54 ஓட்டங்கள் எடுத்து வெற்றி பெற்றது. டாம் அபெல் 31 (22) ஓட்டங்களும், ஹெர்மன் 20 (17) ஓட்டங்களும் எடுத்தனர்.
@SunrisersEC
@SunrisersEC
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |