டர்பன் அணியை துவம்சம் செய்து கோப்பையை தட்டித் தூக்கிய மார்க்ரம் படை!
எய்டன் மார்க்ரம் தலைமையிலான சன்ரைசர்ஸ் ஈஸ்டர்ன் கேப் அணி SA20 கோப்பையை வென்றது.
அபெல் அரைசதம்
கேப்டவுனின் நியூலாண்ட்ஸ் மைதானத்தில் நடந்த SA 20 தொடரின் இறுதிப்போட்டியில், சன்ரைசர்ஸ் ஈஸ்டர்ன் கேப் மற்றும் டர்பன் சூப்பர் ஜெயன்ட்ஸ் அணிகள் மோதின.
சன்ரைசர்ஸ் அணி நாணய சுழற்சியில் வென்று முதலில் ஆடியது. தாவித் மலான் 6 ஓட்டங்களில் டாப்லே பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்.
அதனைத் தொடர்ந்து அபெல் மற்றும் ஹெர்மன் கூட்ட்டணி 90 ஓட்டங்கள் விளாசியது. ஹெர்மன் 26 பந்துகளில் ஒரு சிக்ஸர், 4 பவுண்டரிகளுடன் 42 ஓட்டங்கள் எடுத்து மஹாராஜ் பந்துவீச்சில் அவுட் ஆனார்.
@SunrisersEC
அடுத்து அரைசதம் அடித்த அபெல் 34 பந்துகளில் 55 ஓட்டங்கள் விளாசி வெளியேறினார். அதன் பின்னர் கேப்டன் மார்க்ரம் மற்றும் ஸ்டப்ஸ் பார்ட்னர்ஷிப் அமைத்து அணியின் ஸ்கோரை ஜெட் வேகத்தில் உயர்த்தினர்.
ஸ்டப்ஸ் மிரட்டல் ஆட்டம்
இதன்மூலம் சன்ரைசர்ஸ் அணி 3 விக்கெட் இழப்பிற்கு 204 ஓட்டங்கள் குவித்தது. ஸ்டப்ஸ் 30 பந்துகளில் 56 ஓட்டங்கள் விளாசினார். கேப்டன் எய்டன் மார்க்ரம் 26 பந்துகளில் 2 சிக்ஸர், 3 பவுண்டரிகளுடன் 42 ஓட்டங்கள் எடுத்தார்.
பின்னர் களமிறங்கிய டர்பன் சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணி யென்செனின் புயல்வேகப் பந்துவீச்சில் விக்கெட்டுகளை இழந்தது. அதேபோல் வோரல், பார்ட்மேன் மறுமுனையில் தாக்குதல் தொடுக்க டர்பன் அணி 17 ஓவர்களில் 115 ஓட்டங்களுக்கு சுருண்டது.
இதன்மூலம் 89 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற சன்ரைசர்ஸ் அணி இரண்டாவது முறையாக கோப்பையை தட்டிச் சென்றது.
@SunrisersEC
அதிகபட்சமாக முல்டர் 22 பந்துகளில் 38 ஓட்டங்களும், பிரிட்டோரியஸ் 17 பந்துகளில் 28 ஓட்டங்களும் எடுத்தனர். சன்ரைசர்ஸ் அணியின் தரப்பில் யென்சென் 5 விக்கெட்டுகளும், வோரல் மற்றும் பார்ட்மேன் தலா 2 விக்கெட்டுகளும் கைப்பற்றினர்.
ஆட்டநாயகன் விருதை அபெலும், தொடர் நாயகன் விருதை ஹென்றிச் கிளாஸனும் வென்றனர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |