IPL-லில் கலக்கிய சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் உரிமையாளர் காவ்யா மாறனின் சொத்துமதிப்பு தெரியுமா?
சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் உரிமையாளர் காவ்யா மாறனின் சொத்து மதிப்பு அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.
கவனம் ஈர்த்த காவ்யா மாறன்
ஐபிஎல் இறுதிப் போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் (SRH) அணி தோல்வியடைந்தது பற்றிய செய்திகள் அனைவருக்கும் தெரியும். அந்த தோல்விக்குப் பிறகு, அணியின் உரிமையாளரான காவ்யா மாறன் அழுது கொண்டிருப்பது போன்ற வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது.
இதனால், காவ்யா மாறன் மற்றும் அவரது சொத்து மதிப்பு பற்றிய பேச்சுகள் எழுந்தன.
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் (KKR) அணியின் உரிமையாளரான ஷாருக் கான் பாலிவுட்டின் "கிங்" என்று அழைக்கப்படுபவர். அதே சமயம், மீடியா துறையில் காவ்யா மாறன் மிகவும் புகழ்பெற்றவர்.
காவ்யாவின் தந்தை "இந்தியாவின் டெலிவிஷன் கிங்" என்று அழைக்கப்படும் கலாநிதி மாறன். சன் குழுமத்தின் தலைவரும் நிறுவனரும் ஆன கலாநிதி மாறனின் ஒரே குழந்தை தான் காவ்யா. போர்ப்ஸ் பட்டியலின்படி, இந்தியாவின் பெரிய பணக்காரர்கள் பட்டியலில் கலாநிதி மாறன் 82 வது இடத்தில் உள்ளார். அவருக்கு சுமார் 24 ஆயிரம் கோடி ரூபாய் சொத்து உள்ளது.
காவ்யாவின் சொத்து மதிப்பு எவ்வளவு?
தனது தந்தையிடமிருந்து பெற்ற பாரம்பரியம் மற்றும் தனது சொந்த முயற்சியால் காவ்யா மாறன் சொத்து சேர்த்துள்ளார்.
காவ்யாவின் தந்தை கலாநிதி மாறனின் சொத்து மதிப்பு சுமார் 24 ஆயிரம் கோடி ரூபாய் ஆகும்.
காவ்யாவின் சொந்த சொத்து மதிப்பு சுமார் 400 கோடி ரூபாய் ஆக கணக்கிடப்பட்டுள்ளது.
ஐபிஎல் 2023-ல், SRH அணி ஆஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர் பாட் கம்மின்ஸை 20 கோடி ரூபாய்க்கு வாங்கியது அனைவரது கவனத்தையும் ஈர்த்தது. இது ஐபிஎல் வரலாற்றில் இரண்டாவது அதிக விலை.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |