இஷான் கிஷனின் அதிரடி 94! ஹைதராபாத் அணியிடம் சுருண்ட ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு
ஐபிஎல் 2025 தொடரின் 65 வது லீக் போட்டியில், பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெறாத சன்ரைசர்ஸ் ஹைதராபாத் (SRH) அணி, பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற்ற ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (RCB) அணியை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது.
ஹைதராபாத்தில் நடைபெற்ற இந்தப் போட்டியில், நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற RCB அணி முதலில் பந்து வீச முடிவு செய்தது.
ஹைதராபாத்தின் அதிரடி பேட்டிங்
முதலில் களமிறங்கிய சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு, தொடக்க வீரர்களான அபிஷேக் சர்மா (34 ஓட்டங்கள்) மற்றும் டிராவிஸ் ஹெட் (17 ஓட்டங்கள்) ஆகியோர் நிலையான தொடக்கத்தை அளித்து வெளியேறினர்.
— SunRisers Hyderabad (@SunRisers) May 23, 2025
நான்காவது ஓவரில் களமிறங்கிய இஷான் கிஷன் 48 பந்துகளில் 7 பவுண்டரிகள் மற்றும் 5 சிக்ஸர்களுடன் 94 ஓட்டங்கள் குவித்து, இறுதி வரை ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தார்.
One brings two 💪
— SunRisers Hyderabad (@SunRisers) May 23, 2025
Nitish Kumar Reddy | Pat Cummins | #PlayWithFire | #RCBvSRH | #TATAIPL2025 pic.twitter.com/cGZM2CZZbu
இவருடன், ஹென்ரிச் கிளாசன் (24), அனிகேத் வர்மா (26) என சராசரியான ஓட்டங்களை குவித்து அணியின் வலுவான ஓட்டங்களுக்கு வழி வகுத்தனர்.
இதன் மூலம் இறுதியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 231 ஓட்டங்கள் வெற்றி இலக்காக நிர்ணயித்தது.
பெங்களூருவின் சரிவு
232 ஓட்டங்கள் என்ற கடின இலக்கை நோக்கி களமிறங்கிய ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கு, தொடக்க வீரர்களான ஃபில் சால்ட் (62 ஓட்டங்கள்) மற்றும் விராட் கோலி (43 ஓட்டங்கள்) குவித்து அதிரடியான தொடக்கத்தை அளித்தனர்.
ஆனால் பின்னர் வந்த மயங்க் அகர்வால் (11) மற்றும் ரஜத் படிதார் (18) ஆகியோர் ஆட்டமிழந்த பிறகு, RCB அணியின் விக்கெட்டுகள் மளமளவென விழுந்தன.
அத்துடன் இறுதியில், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி 19.5 ஓவர்களிலேயே அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து, இலக்கை எட்ட முடியாமல் தோல்வியடைந்துள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |