SA20 கிரிக்கெட் தொடர்: 3வது முறையாக சாம்பியன் பட்டம் வென்ற சன்ரைசர்ஸ் ஈஸ்டர்ன் கேப் அணி
SA20 கிரிக்கெட் தொடரில் சன்ரைசர்ஸ் ஈஸ்டர்ன் கேப் அணி மூன்றாவது முறையாக சாம்பியன் பட்டம் கைப்பற்றி அசத்தியுள்ளது.
3வது முறையாக சாம்பியன் பட்டம் பெற்ற சன்ரைசர்ஸ்
2025 - 2026 SA 20 கிரிக்கெட் தொடரில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற இறுதிப் போட்டியில் பிரிட்டோரியா கேபிடல்ஸ் அணி மற்றும் சன்ரைசர்ஸ் ஈஸ்டர்ன் கேப் அணிகள் மோதின.
இந்த போட்டியில் முதல் பேட்டிங்கில் களமிறங்கிய சன்ரைசர்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 158 ஓட்டங்கள் குவித்தது.
𝐂𝐇𝐀𝐌𝐏𝐈𝐎𝐎𝐎𝐎𝐍𝐒𝐒𝐒𝐒 𝐎𝐅 𝐒𝐎𝐔𝐓𝐇 𝐀𝐅𝐑𝐈𝐂𝐀 🧡🏆 pic.twitter.com/HhfYheXxmG
— Sunrisers Eastern Cape (@SunrisersEC) January 25, 2026
அந்த அணியின் நட்சத்திர வீரர் டிவால்ட் பிரெவிஸ் அதிரடியாக விளையாடி 56 பந்துகளில் 101 ஓட்டங்கள் குவித்தார்.
இதையடுத்து 159 ஓட்டங்கள் என்ற இலக்குடன் களமிறங்கிய சன்ரைசர்ஸ் அணி 19.2 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 162 ஓட்டங்கள் எடுத்து வெற்றி பெற்றது.
5 வது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த சன்ரைசர்ஸ் அணி மேதிவ் 68 ஓட்டமும், ஸ்டப்ஸ் 63 ஓட்டமும் குவித்து சன்ரைசர்ஸ் ஈஸ்டர்ன் கேப் அணியை 3வது முறையாக சாம்பியன்ஸ் பட்டம் வெல்ல வழிவகுத்தனர்.

காவ்யா மாறன் கொண்டாட்டம்
சன்ரைசர்ஸ் ஈஸ்டர்ன் கேப் அணியின் வெற்றி உறுதியானதை அடுத்து அந்த அணியின் உரிமையாளர் காவ்யா மாறன் மகிழ்ச்சியில் துள்ளிக் குதித்தார்.
மேலும் தன்னுடைய அணி மூன்றாவது முறையாக பட்டம் வென்றதை அடுத்து அதை குறிக்கும் வகையில் 3 விரல்களைக் காட்டி கொண்டாடிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |