சூப்பர் எல் நினோவால் கதிகலங்கப் போகும் அவுஸ்திரேலியா... நூற்றுக்கணக்கானோர் இறக்கக்கூடும்

Weather El Niño
By Arbin Sep 24, 2026 12:16 AM GMT
Report

How hot Australia will get during the super El Niño: சூப்பர் எல் நினோவால் அவுஸ்திரேலியாவில் வெப்பம் எவ்வளவு அதிகரிக்கும்.

வலுவான 'சூப்பர் எல் நினோ' வெப்பநிலையை இயல்பை விட மிக அதிகமாக உயர்த்தவுள்ளதால், வரும் மாதங்களில் நூற்றுக்கணக்கான அவுஸ்திரேலிய மக்கள் உயிரிழக்கக்கூடும் என்று விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர்.

வெப்பநிலை

காலநிலை தாக்க ஆய்வகத்தின் ஆராய்ச்சியாளர்கள், செப்டம்பர் முதல் பிப்ரவரி வரையிலான காலகட்டத்தில் அவுஸ்திரேலியா முழுவதும் வெப்பம் தொடர்பான கூடுதல் 260 மரணங்கள் நிகழும் என்றும், அவற்றில் கிட்டத்தட்ட பாதி நியூ சவுத் வேல்ஸ் (NSW) மாகாணத்தில் ஏற்படும் என்றும் கணித்துள்ளனர்.

சூப்பர் எல் நினோவால் கதிகலங்கப் போகும் அவுஸ்திரேலியா... நூற்றுக்கணக்கானோர் இறக்கக்கூடும் | Super El Nino As Experts Warn

இந்த வானிலை நிகழ்வு, ஆறு மாத காலப்பகுதியில் வெப்பநிலையை இயல்பை விட சுமார் 1.2 டிகிரி செல்சியஸ் அளவுக்கு உயர்த்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

செவ்வாய்க்கிழமை வெளியிடப்பட்ட அந்த அறிக்கையில், குயின்ஸ்லாந்தில் கூடுதலாக 61 பேரும், மேற்கு அவுஸ்திரேலியாவில் 72 பேரும், தென் அவுஸ்திரேலியாவில் 12 பேரும், வடக்கு மண்டலத்தில் கூடுதலாக மூவரும் வெப்பம் தொடர்பான காரணங்களால் உயிரிழக்கக்கூடும் என்றும் கணித்துள்ளது.

ரஷ்யாவிற்கு வேதனையான குளிர்காலம் உறுதி... எச்சரிக்கை விடுத்த ஜெலென்ஸ்கி

ரஷ்யாவிற்கு வேதனையான குளிர்காலம் உறுதி... எச்சரிக்கை விடுத்த ஜெலென்ஸ்கி

இருப்பினும், 1996 முதல் 2025 வரையிலான தரவுகளுடன் ஒப்பிடும்போது விக்டோரியாவில் 13 வெப்ப இறப்புகள் நிகரமாகக் குறையும். தீவிர எல் நினோ காரணமாக முதல் ஒன்பது மாதங்களில் உலகம் முழுவதும் கூடுதலாக 4,51,000 பேர் உயிரிழப்பார்கள் என்று ஆய்வாளர்கள் குழு ஒன்று கணித்துள்ளது.

மேலும், 2027-ஆம் ஆண்டின் வசந்த காலம் வரை 'எல் நினோ' நிலை நீடிக்கும் என்று தற்போதைய கணிப்புகள் தெரிவிக்கும் நிலையில், இறப்பு எண்ணிக்கைகள் அனைத்தும் மேலும் அதிகரிக்கும் என்றும்;

குறிப்பாக, சராசரிக்கும் அதிகமான வெப்பநிலை மற்றும் வெப்பம் தொடர்பான உயிரிழப்புகள் போன்ற பாதிப்புகள் ஜூன் மற்றும் ஜூலை மாதங்கள் வரையிலும் நீடிக்கும் என்பதால் இந்த அதிகரிப்பு நிகழக்கூடும் என்றும் ஆய்வாளர்கள் குறிப்பிடுகின்றனர்.

மட்டுமின்றி, சாதாரண ஆண்டில் வழக்கமாக எதிர்பார்க்கப்படுவதை விட, 'தீவிர வெப்பம்' நிலவும் நாட்களின் எண்ணிக்கையை 'எல் நினோ' 44 சதவீதம் அதிகரிக்கும் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது.

அவசரக்கால நிதி

நைஜீரியாவில் மட்டும் செப்டம்பர் முதல் பிப்ரவரி வரையில் சூப்பர் எல் நினோவால் கூடுதலாக 31,400 பேர்கள் மரணமடையக்கூடும் என கணித்துள்ளனர்.

சூப்பர் எல் நினோவால் கதிகலங்கப் போகும் அவுஸ்திரேலியா... நூற்றுக்கணக்கானோர் இறக்கக்கூடும் | Super El Nino As Experts Warn

ஆசியாவின் சில பகுதிகளிலும் இதே போன்ற எண்ணிக்கையிலான உயிரிழப்புகள் ஏற்படும் என்று கணிக்கப்பட்டுள்ளது; அதன்படி, இந்தோனேசியாவில் கூடுதலாக 19,300 பேரும், சூடானில் 17,500 பேரும், இந்தியாவில் 15,800 பேரும், பிரேசிலில் 13,300 பேரும் உயிரிழக்கக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கடுமையான வெப்பத்தைச் சமாளிக்க மக்களுக்கு உதவும் வகையில், மிக மோசமாகப் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு அவசரக்கால நிதியைத் திருப்பிவிட வேண்டும் என்று அந்த அறிக்கை வலியுறுத்தியது;

அத்துடன் வெப்பம் குறித்த எச்சரிக்கைகள், பாதிக்கப்படக்கூடிய மக்களுக்கான சுகாதாரச் சேவைகள், குளிர்ச்சியூட்டும் மையங்கள் மற்றும் நீர் அருந்தும் வசதிகள், மற்றும் தொழிலாளர்களுக்கான பாதுகாப்பு நடவடிக்கைகள் ஆகியவற்றையும் அது பரிந்துரைத்துள்ளது. 

3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கொழும்பு

08 Nov, 2023
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, யாழ்ப்பாணம், யாழ்ப்பாணம்

31 Oct, 2026
மரண அறிவித்தல்

வாதரவத்தை, Leamington Spa, United Kingdom

31 Oct, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர் வேதரடைப்பு, காரைநகர் மருதடி

24 Oct, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், Gossau, Switzerland

14 Nov, 2025
மரண அறிவித்தல்

உரும்பிராய், திருகோணமலை, வவுனியா

03 Nov, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி

சுண்டுக்குழி, கிளிச்சி-ச ous ஸ்-போயிஸ், France

04 Nov, 2010
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, உருத்திரபுரம், திருவையாறு, Cergy-Pontoise, France

03 Nov, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

திருகோணமலை, Zürich, Switzerland

03 Nov, 2025
மரண அறிவித்தல்

கொழும்பு, London, United Kingdom

26 Oct, 2026
13ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு குறிகட்டுவான், கனடா, Canada

03 Nov, 2013
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Brampton, Canada

04 Nov, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், London, United Kingdom

03 Nov, 2024
மரண அறிவித்தல்

அல்வாய், உபயகதிர்காமம்

01 Nov, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், மானிப்பாய், London, United Kingdom, கனடா, Canada

02 Nov, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், வண்ணார்பண்ணை, London, United Kingdom

14 Nov, 2025
மரண அறிவித்தல்

கைதடி, Isle of Wight, United Kingdom

30 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
6ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, பாண்டியன்குளம், Toronto, Canada

30 Oct, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Thun, Switzerland

27 Oct, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US