சூப்பர் மூன்! இன்று வானில் நிகழப்போகும் அதிசயம்
இன்று வானில் நிகழப்போகும் சூப்பர் மூன் என்ற அதிசய நிகழ்வை காணத்தவறாதீர்கள்! இந்த ஆண்டின் இரண்டாவது சூப்பர் மூன் இதுவாகும்.
நாம் வாழும் பூமியின் துணைக்கோளான நிலவு பூமிக்கு மிக அருகில் வருவதையே சூப்பர் மூன் என்கிறோம்.
இன்றும், ஆகஸ்ட் 30ம் தேதியும் சூப்பர் மூன் நிகழப்போகிறது, இதை நீங்கள் பார்க்கமுடியாமல் போனால் மீண்டும் 2037ம் ஆண்டே காணமுடியும்.
பூமியில் இருந்து பல லட்சம் கிமீ தொலைவில் சுற்றி வரும் நிலவானது, மிகவும் பெரியதாகவும் அதே சமயம் பிரகாசமாகவும் தெரியும், ஏனெனில் நிலவானது பூமிக்கு மிக அருகில் வருகிறது.
இதன் நிறமும் நீல வண்ணத்தில் இருப்பதால் நீல சூப்பர் மூன் என்று அழைக்கப்படுகிறது, இந்த நாளில் நிலவின் சுற்றுப்பாதை 5 டிகிரி கோணத்தில் சாய்ந்துள்ளது.
இந்நிகழ்வை 18:31 UTC ஆகஸ்ட்1-ம் தேதியும், ஆக்ஸ்ட் -2 ம் தேதி (12:01 am IST ) பார்க்கலாம், மற்ற நாட்களை விட 14% அளவில் பெரியதாகவும், 30% கூடுதல் பிரகாசமாகவும் நிலா காட்சியளிக்கும்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |