கோடீஸ்வரர்களுக்காக பூமிக்கு அடியில் பங்கர்களை உருவாக்கும் சுவிஸ் நாட்டவர்
Wealthy people are building Swiss bunkers to stash their wealth: செல்வத்தை பதுக்கிவைப்பதற்காக சுவிட்சர்லாந்தில் பதுங்கு குழிகளை உருவாக்கிவருகிறார்கள் கோடீஸ்வரர்கள்.
கோடீஸ்வரர்கள் தங்கள் செல்வத்தைப் பதுக்கி வைப்பதற்காக, ஆல்ப்ஸ் மலையில், பங்கர்கள் என்னும் பதுங்கு குழிகளை உருவாக்கிவருகிறார் சுவிஸ் நாட்டவர் ஒருவர்.
ஆல்ப்ஸ் மலையில் பங்கர்கள்
சுவிஸ் தொழிலதிபரான தாமஸ் கேஸ்ஸர் (Thomas Gasser) என்பவர், Brünig Mega Safe என்னும் பெயரில், சுவிட்சர்லாந்திலுள்ள Lungern என்னுமிடத்தில், பதுங்கு குழிகளை உருவாக்கிவருகிறார்.

உலகிலுள்ள கோடீஸ்வரர்கள், தங்கள் தங்கம், விலையுயர்ந்த கார்கள், விலையுயர்ந்த உயர் தர ஒயின் முதலான தங்கள் சொத்துக்களை பாதுகாத்துவைப்பதற்காக இந்த பதுங்கு குழிகள் உருவாக்கப்பட்டுவருகின்றன.

ஆல்ப்ஸ் மலையைக் குடைந்து, சுமார் 100 மீற்றர் ஆழத்தில் 20 பதுங்கு குழிகளை உருவாக்க திட்டமிட்டுள்ளார் தாமஸ்.
100 ஆண்டுகளுக்கு குத்தகைக்கு விடப்படும் இந்த பதுங்கு குழிகளுக்கான கட்டணம், சுமார் ஒரு மில்லியன் சுவிஸ் ஃப்ராங்குகள்!

அத்துடன், யாரும் நினைத்த நேரம் நேரடியாக இந்த பதுங்கு குழிகளுக்குள் சென்றுவிடமுடியாது. கடுமையான பாதுகாப்பு சோதனைகளுக்குப் பின்பே இந்த பதுங்கு குழிகளை அடையமுடியும்.

பொதுமக்கள் யாரும் அங்கு செல்லமுடியாது. ஏன், ஊடகவியலாளர்களுக்குக் கூட, இந்த பதுங்கு குழிகளின் வாசல் எங்கு உள்ளது என்பது காட்டப்படவில்லை.
சுவிஸ் தேசிய வங்கிக்கு எந்த அளவுக்கு பாதுகாப்பு உள்ளதோ, அதற்கு ஈடாக இந்த பதுங்கு குழிகளுக்கு பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்படும் என்கிறார் தாமஸ்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |