மே மாதம் 21ஆம் திகதி முதல்... கனடா வழங்கும் Super Visa
கனடாவில் வாழ்பவர்களின் பெற்றோர் மற்றும் தாத்தா பாட்டிகளுக்கோர் மகிழ்ச்சியான செய்தி. மே மாதம் 21ஆம் திகதி முதல், கனடா Super Visa ஒன்றை இவர்களுக்காக வழங்க தயாராகிவருகிறது.
ஸ்பான்சர் செய்தவர்களுக்கு...
2020 ஆம் ஆண்டில் தங்கள் பெற்றோர் மற்றும் தாத்தா பாட்டிகளை கனடாவுக்கு அழைத்துவருவதற்காக ஸ்பான்சர் செய்ய விண்ணப்பப்படிவங்களை சமர்ப்பித்த 35,700 ஸ்பான்சர்களுக்கு, கனடாவின் புலம்பெயர்தல், அகதிகள் மற்றும் குடியுரிமை அமைப்பு, அழைப்பிதழ்களை அனுப்புவதை நீட்டிக்க உள்ளது. ஆகவே, ஏற்கனவே 2020ஆம் ஆண்டு விண்ணப்பப்படிவங்களை சமர்ப்பித்தவர்கள், தங்களுக்கு வரும் மின்னஞ்சல்களை கவனித்துக்கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளார்கள்.
Photo: Shutterstock
ஸ்பான்சர் செய்யாதவர்களுக்கு...
நீங்கள் உங்கள் பெற்றோர் மற்றும் தாத்தா பாட்டிகளை கனடாவுக்கு அழைத்துவருவதற்காக ஸ்பான்சர் செய்ய விண்ணப்பப்படிவங்களை சமர்ப்பிக்கவில்லை என்றால், சூப்பர் விசாவைப் பயன்படுத்தி உங்கள் பெற்றோர் அல்லது தாத்தா பாட்டியை கனடாவுக்கு அழைத்துவர ஒரு வாய்ப்பு உள்ளது.
இந்த சூப்பர் விசா, கனடாவுக்கு வரும் உங்கள் பெற்றோர் மற்றும் தாத்தா பாட்டிகளை ஒரு நேரத்தில் 5 ஆண்டுகள் வரை கனடாவில் தங்கியிருக்க அனுமதிக்கிறது, மேலும், உங்கள் இருப்பை கனடாவில் இருக்கும்போது நீட்டிக்கவும் முடியும்.
தகுதி வரம்பு
சூப்பர் விசாவிற்குத் தகுதிபெற, அவர்களுக்கு ஸ்பான்சர் செய்பவர் ஒரு கனேடிய குடிமகனாக, அல்லது, நிரந்தர குடியிருப்பு அனுமதி பெற்றவராக அல்லது பதிவு செய்யப்பட்ட இந்தியராக இருக்கவேண்டியது அவசியம்.
அத்துடன், அவர்கள் தேவையான ஆவணங்களை வழங்கவும் வேண்டும்.
விண்ணப்ப செயல்முறை
ஸ்பான்சர் செய்வோர், தங்களைப் பெற்றெடுத்த பெற்றோர் அல்லது தத்தெடுத்த பெற்றோருக்கு ஸ்பான்சர் செய்யமுடியும். அத்துடன், நிர்ணயிக்கப்பட்ட அளவிலான பணம் தங்களிடம் இருப்பதை உறுதிப்படுத்தவேண்டும்.
ஸ்பான்சர் செய்யப்படும் பெற்றோர் அல்லது தாத்தா பாட்டி முறையான, செல்லுபடியாகும் மருத்துவக் காப்பீடு பெற்றிருக்க வேண்டும்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |