முக அழகை அதிகரிக்க சூப்பரான ஃபேஸ் மாஸ்க்! தொடர்ந்து செய்து பாருங்க
பொதுவாக பழங்காலத்தை விட இக்காலத்தில் தான் அதிக சரும பிரச்சனைகளை சந்திக்க நேரிடுகிறது.
இதற்கு மோசமான சுற்றுச்சூழல் மட்டுமின்றி, ஆரோக்கியமற்ற பழக்கவழக்கங்களும், ஆரோக்கிய பிரச்சனைகளும் தான் காரணம்.
முகப்பரு, கரும்புள்ளிகள், வறட்சியான சருமம் போன்றவற்றால் பொலிவிழந்த மற்றும் அசிங்கமான முகத்தை பலரும் பெறுகிறோம்.
அந்தகாலத்தில் நம் முன்னோர்கள் தங்களது அழகை மேம்படுத்த எந்த ஒரு கெமிக்கல் கலந்த அழகு சாதனப் பொருட்களையும் பயன்படுத்தவில்லை. மாறாக இயற்கைப் பொருட்களைக் கொண்டு தான் தங்களது சருமத்தைப் பராமரித்தார்கள்.
அந்தவகையில் சரும பிரச்சினையை போக்கி முக அழகை எப்படி அதிகரிக்க உதவும் ஒரு சூப்பரான ஃபேஸ் மாஸ்க் ஒன்றை எப்படி செய்யலாம் என பார்ப்போம்.
தேவையான பொருட்கள்
- கடலை மாவு - 1டேபிள் ஸ்பூன்
- பால் பவுடர் / பால் - சிறிதளவு
- நறுக்கிய பாதி தக்காளி
செய்முறை
முகத்தினை அழகுபடுத்த ஃபேஸ் மாஸ்க் செய்வதற்கு ஒரு பவுலில் கடலை மாவு 1 டேபிள் ஸ்பூன் அளவு எடுத்துக்கொள்ளவும்.
அந்த கடலை மாவுடன் பால் அல்லது பால் பவுடர் சேர்த்து கொள்ளவும். அடுத்ததாக நறுக்கிய பாதி தக்காளியின் சாறு சிறிதளவு சேர்த்து மிக்ஸ் செய்யவும். அடுத்து கலந்த பிறகு முகத்தில் தடவி சிறிது நேரம் கழித்து நீரில் முகத்தினை வாஷ் செய்து கொள்ளலாம்.
முகத்தில் இருந்து இதனை வாஷ் செய்த பிறகு சோப் பயன்படுத்தாமல் நீங்கள் உபயோகப்படுத்தும் ஃபேஸ் வாஷை மட்டுமே பயன்படுத்த வேண்டும்.
இந்த டிப்ஸ்யை பின்பற்றி வந்தால் கண்டிப்பாக சருமமானது நல்ல வெள்ளையாக மாறி மாற்றத்தை நீங்களே உணர்வீர்கள்.