உக்ரைனுக்கு ஆதரவு குறைகிறதா? ஜேர்மனியில் உருவாகியுள்ள எதிர்ப்பு
ரஷ்யா உக்ரைன் நாடுகளுக்கிடையிலான போரில், உக்ரைனுக்கு ஐரோப்பாவில் ஆதரவு குறைந்து வருகிறதோ என்னும் எண்ணத்தை உருவாக்கியுள்ளது சமீபத்திய ஆய்வு ஒன்று.
ஜேர்மன் மக்கள் கருத்து
ஜேர்மனியில் சமீபத்தில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வு ஒன்றில், நேட்டோ அமைப்பில் உக்ரைன் சேருவதற்கு ஜேர்மானியர்களில் 54 சதவிகிதம் பேர் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்கள்.
ஜேர்மானியர்களின் விருப்பம்
மாறாக, போரை நிறுத்துவது தொடர்பாக ரஷ்யாவுடன் உக்ரைன் பேச்சுவார்த்தை நடத்தவேண்டும் என ஜேர்மானியர்களில் 55 சதவிகிதத்தினர் விரும்புகிறார்கள்.
இந்நிலையில், ஜேர்மனி மீண்டும் உக்ரைனுக்கு ஆயுத உதவிகள் வழங்க உள்ளது. ஆனால், ஜேர்மனி உக்ரைனுக்கு ஆயுத உதவிகள் செய்வதற்கு, ஜேர்மன் மக்களிடம் ஆதரவு குறைந்து வருகிறது.
ஜேர்மன் பிரபலங்கள் பலர் உக்ரைனுக்கு ஜேர்மனி ஆயுதங்கள் வழங்குவதை நிறுத்தக்கோரி ஜேர்மன் சேன்ஸலர் ஓலாஃப் ஷோல்ஸுக்கு வெளிப்படையாக கடிதங்கள் அனுப்பியுள்ளார்களாம். அதற்கு பதிலாக, இரு நாடுகளுக்கும் இடையில் போர் நிறுத்தம் அறிவிக்கும் வகையில் ஷோல்ஸ் பேச்சுவார்த்தை நடத்த அவர்கள் வலியுறுத்தியுள்ளார்கள்.
உக்ரைனுக்கு ஆயுதங்கள் வழங்குவது பிரச்சினையை பெரிதாக்கத்தான் செய்யும் என ஏற்கனவே நேட்டோ அமைப்பை ரஷ்யா எச்சரித்திருந்தது குறிப்பிடத்தக்கது.