மேக்ரான் ராஜினாமா செய்ய வற்புறுத்தல்... ஆதரவாளர்களே எதிராக திரும்பிய சோகம்
பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவல் மேக்ரான் ராஜினாமா செய்ய அவருக்கு தொடர்ந்து அழுத்தம் கொடுக்கப்பட்டு வரும் நிலையில், அவரது கூட்டணிக் கட்சியினரே அவருக்கு எதிராக திரும்பியுள்ளார்கள்.
மேக்ரான் ராஜினாமா செய்ய வற்புறுத்தல்
பிரான்சில் நிலவும் அரசியல் நெருக்கடியை முடிவுக்குக் கொண்டுவரும் வகையில் பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவல் மேக்ரான் ராஜினாமா செய்ய அல்லது நாடாளுமன்றத்தைக் கலைக்க அவருக்கு அழுத்தம் கொடுக்கப்பட்டுவருகிறது.
இந்நிலையில், 2017ஆம் ஆண்டு தேர்தல் வெற்றிக்குப் பின் மேக்ரான் பிரதமராக நியமித்த எடுவா பிலிப்பும் (Édouard Philippe), 2024ஆம் ஆண்டு அவர் பிரதமராக நியமித்த கேப்ரியல் அட்டாலும் (Gabriel Attal), மேக்ரானுக்கு அளித்துவந்த ஆதரவை விலக்கிக்கொண்டுள்ளார்கள்.
ஜனாதிபதி மேக்ரான் முன்கூட்டியே தேர்தல் அறிவிக்கவேண்டும் என்றும், 2026ஆம் ஆண்டுக்கான பட்ஜெட்டை நாடாளுமன்றம் ஏற்றுக்கொண்டதும் அவர் பதவி விலகவேண்டும் என்றும் கூறியுள்ளார் பிலிப்.
அதேபோல, அட்டாலும், ஜனாதிபதி மேக்ரான் எடுக்கும் முடிவுகளை புரிந்துகொள்ளமுடியவில்லை என்று கூறியுள்ளார்.
தான் 2027ஆம் ஆண்டு வரையிலான தனது பதவிக்காலம் முடியும் வரை ராஜினாமா செய்யமாட்டேன் என கூறிவருகிறார் மேக்ரான்.
ஆனால், பிரான்ஸ் அரசியலில் தற்போது ஏற்பட்டுள்ள மாற்றங்களைப் பார்ர்கும்போது மேக்ரானின் ஆசை நிறைவேறுமா என்பது தெரியவில்லை!
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |