அவதூறு வழக்கில் கிரிக்கெட் வீரர் தோனிக்கு உச்சநீதிமன்றம் நோட்டிஸ்
அவதூறு வழக்கில் கிரிக்கெட் வீரர் மகேந்திர சிங் தோனிக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
தோனிக்கு உச்சநீதிமன்றம் நோட்டிஸ்
அவதூறு வழக்கை எதிர்த்து ஐபிஎஸ் அதிகாரி சம்பத்குமார் தொடர்ந்த வழக்கில், கிரிக்கெட் வீரர் மகேந்திர சிங் தோனிக்கு நோட்டீஸ் அனுப்ப உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
2013 ஆம் ஆண்டு நடந்த ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் சூதாட்டம் நடந்ததாக புகார் வந்த நிலையில், ஐபிஎஸ் அதிகாரி சம்பத்குமார் தலைமையில் விசாரணை நடந்தது.
அப்போது, இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் எம்.எஸ்.தோனியும் சூதாட்டத்தில் ஈடுபட்டதாக தனது அறிக்கையில் சம்பத்குமார் குற்றம் சாட்டியிருந்தார்.
இது தொடர்பாக, கிரிக்கெட் வீரர் எம்.எஸ்.தோனி தொடர்ந்த அவமதிப்பு வழக்கில், சென்னை உயர்நீதிமன்றம் ஐபிஎஸ் அதிகாரி சம்பத்குமாருக்கு 15 நாட்கள் சிறை தண்டனை விதித்தது.
இதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் சம்பத்குமார் மேல்முறையீடு செய்த நிலையில், சென்னை உயர்நீதிமன்ற உத்தரவுக்கு நீதிபதிகள் அபய் ஓகா மற்றும் உஜ்ஜல் புய்யன் அமர்வு தடை விதித்தது.
மேலும், இது தொடர்பாக விளக்கம் அளிக்க எம்எஸ் தோனிக்கு நோட்டீஸ் அனுப்பவும் உச்சநீதிமன்ற நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |