நாவூறும் சுவையில் சுறா புட்டு.., இலகுவாக எப்படி செய்வது?
அசைவ பிரியர்களுக்கு மிகவும் பிடித்த உணவுகளில் ஒன்று மீன்.
காலை, மதியம், இரவு என மூன்று நேரம் மீன் கொடுத்தாலும் நம்மில் பலர் சலிக்காமல் சாப்பிடுவோம்.
அந்தவகையில், நாவூறும் சுவையில் சுறா புட்டு எளிமையான முறையில் எப்படி செய்வது என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
- பால் சுறா- 5 துண்டு
- மஞ்சள் தூள்- ½ ஸ்பூன்
- உப்பு- தேவையான அளவு
- எண்ணெய்- 2 ஸ்பூன்
- கறிவேப்பிலை- 1 கொத்து
- வெங்காயம்- 1
- பூண்டு- 3 பல்
- இஞ்சி- 1 துண்டு
- பச்சை மிளகாய்- 2
- கொத்தமல்லி- சிறிதளவு
செய்முறை
முதலில் ஒரு இட்லி பாத்திரத்தில் பால் சுறா சேர்த்து வேகவைத்து எடுத்து அதன் தோலை உரித்து எடுத்துக்கொள்ளவும்.
பின் இதனை ஆறவைத்து அதன் தோலை உரித்து உதிர்த்து எடுத்துக்கொள்ளவும்.
அடுத்து இதில் மஞ்சள் தூள், உப்பு சேர்த்து பிணைந்து எடுத்துக்கொள்ளவும்.
இதற்கடுத்து வாணலில் எண்ணெய் ஊற்றி சூடானதும் அதில் நறுக்கிய வெங்காயம், இஞ்சி, பூண்டு மற்றும் பச்சைமிளகாய் சேர்த்து வதக்கிக்கொள்ளவும்.
பின்னர் இதில் உதிர்த்து வைத்த பால் சுறாவை சேர்த்து கிளறிக்கொள்ளவும்.
இறுதியாக இதில் நறுக்கிய கொத்தமல்லி தூவி இறக்கினால் சுவையான சுறா புட்டு தயார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |