தேர்தல் முடிவுக்கு முன்பே போட்டியின்றி வெற்றி பெற்ற பாஜக வேட்பாளர்
மக்களவை தேர்தலில் சூரத் தொகுதியில் பாஜக வேட்பாளர் முகேஷ் தலால் போட்டியின்றி வெற்றி பெற்றுள்ளார்.
பாஜக வேட்பாளர்
இந்திய மாநிலமான குஜராத், சூரத் தொகுதியில் பாஜக வேட்பாளர் முகேஷ் தலால் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டார்.
அங்கு, காங்கிரஸ் வேட்பாளர் நிலேஷ் கும்பானியின் வேட்புமனு நிராகரிக்கப்பட்டது. மேலும், பகுஜன் சமாஜ் கட்சி வேட்பாளர் உள்பட 8 வேட்பாளர்களும் வேட்புமனுக்களை வாபஸ் பெற்றனர்.
இதனால், பாஜக வேட்பாளர் முகேஷ் தலால் போட்டியின்றி வெற்றி பெற்றதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இதற்கான சான்றிதழையும் தேர்தல் அதிகாரிகள் அவரிடம் வழங்கியுள்ளனர்.
பாஜக வேட்பாளர் முகேஷ் தலாலுக்கு குஜராத் மாநில பாஜக தலைவர் சி.ஆர்.பாட்டில் தனது ட்விட்டர் எக்ஸ் தளத்தில் வாழ்த்து தெரிவித்துள்ளார். மேலும், அவர் பிரதமர் நரேந்திர மோடிக்கு முதல் வெற்றி என்றும் குறிப்பிட்டுள்ளார்.
இதுகுறித்து, குஜராத் மாநில காங்கிரஸ் தலைவர் சக்திசிங் கோஹில், "பாஜகவின் விருப்பத்தின் பேரில் காங்கிரஸ் வேட்பாளர் வேட்புமனு நிராகரிப்பட்டது. இந்த ஜனநாயக படுகொலையை உயர்நீதிமன்றத்தில் முறையிடுவோம்" என்றார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |