தீபாவளி போனஸாக ரூ.1 லட்சம்! தொழிலதிபரின் நெகிழ்ச்சி செயல்
Surat Businessman Gives Each Employee Rs 1 Lakh: சூரத்தை சேர்ந்த Ramswaroop Munde என்ற தொழிலதிபர் தன்னுடைய ஊழியர்களுக்கு இந்திய ரூபாய் மதிப்பில் ரூ.1 லட்சத்துக்கும் அதிகமான தொகையை தீபாவளி பரிசாக வழங்கியுள்ளார்.
சூரத்தின் வரச்சா பகுதியில் ஆடை வணிகம் நடத்தி வருகிறார் Ramswaroop Munde.
தனது நிறுவனத்தில் பணியாற்றும் 20 ஊழியர்களுக்கு 1 லட்ச ரூபாய்க்கும் அதிகமாக தீபாவளி போனஸ் வழங்கியுள்ளார்.
ஊழியர்களின் அர்ப்பணிப்பு மற்றும் வணிக வளர்ச்சிக்கு அவர்கள் ஆற்றிய பங்களிப்பை பாராட்டும் விதமாக இந்த பரிசு வழங்கப்பட்டுள்ளதாக மன மகிழ்வுடன் தெரிவிக்கிறார் Ramswaroop Munde.
ஊழியர்களை தன்னுடைய குடும்ப உறுப்பினர்கள் என குறிப்பிடும் Ramswaroop Mundeன் இந்த செயல் இணையத்தில் வெளியாகி பலரது பாராட்டுகளை பெற்று வருகிறது.

வீடியோவில், வெள்ளித்தட்டொன்றில் 100, 200, 500 ரூபாய் நோட்டுகள் அடுக்கி வைக்கப்பட்டு ஒவ்வொரு நபருக்கும் பணத்தை வழங்குகின்றனர்.
Ramswaroop Mundeன் ஆரம்ப காலகட்டங்களில் வறுமையால் கஷ்டப்பட்டதாகவும், பணத்தின் மதிப்பு குடும்ப சூழலை நன்கு அறிந்ததால் மட்டுமே தன்னுடைய ஊழியர்களும் சந்தோஷமாக தீபாவளியை கொண்டாட வேண்டும் என நோக்கத்துடன் வழங்கியதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.