ஆண்டுக்கு 15 கோடி வருவாய்... தொழிலை விட்டுவிட்டு துறவறம் தழுவும் குடும்பம்
A Surat textile trader who built a business with an annual turnover of about Rs 15 crore is giving it all up to become a Jain monk: சூரத் என்னுமிடத்தைச் சேர்ந்த வியாபாரி ஒருவர், ஆண்டுக்கு 15 கோடி வருவாய் தரும் தொழிலைத் துறந்து துறவறம் மேற்கொள்ள இருக்கிறார்.
இந்தியாவின் ராஜஸ்தான் மாநிலத்திலுள்ள உதய்ப்பூர் என்னுமிடத்தைச் சேர்ந்தவர் திலீப் பாய் போகர் (47).
குஜராத் மாநிலத்திலுள்ள சூரத் நகருக்கு வந்து ஆடை வியாபாரம் துவங்கியுள்ளார் திலீப்.
துறவறம் தழுவும் குடும்பம்
வியாபாரம் வேகமாக வளர, மேலும் இரண்டு கடைகளை திறந்துள்ளார். பல்வேறு இயந்திரங்களையும் வாங்கி ஆடை தயாரிப்பில் பயன்படுத்தும் அளவுக்கு வருவாய் வரத் துவங்கியுள்ளது.

தற்போது ஆண்டுக்கு சுமார் 15 கோடி ரூபாய் வருவாய் ஈட்டும் திலீப், ஜைன மதத் துறவி ஒருவரை சந்தித்துள்ளார்.
கொஞ்சம் கொஞ்சமாக ஜைனம் அவரை ஈர்க்க, துறவறம் தழுவ முடிவு செய்துள்ளார் திலீப்.
அவரது மகள்களில் ஒருவரான ஷைலி ஏற்கனவே 2023ஆம் ஆண்டு துறவறம் மேற்கொண்டு விட்டார்.
அடுத்ததாக, 2027ஆம் ஆண்டு, பிப்ரவரி மாதம் 8ஆம் திகதி திலீப் துறவறம் மேற்கொள்ள இருக்கிறார்.
அவருடன், அவரது மனைவியான ஜோதி பென் (45), மகள்களான சவ்வி (22) மற்றும் சர்வி (14) ஆகியோரும் துறவறம் மேற்கொள்ள இருக்கிறார்கள்.