இப்படி ஆயிடுச்சே! ஷாட் அடிக்க முயன்ற போது உடைந்து போன பேட்... பரிதாபமாக அவுட்டாகி வெளியேறிய சுரேஷ் ரெய்னா வீடியோ
மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் பந்தை எதிர்கொண்ட போது பேட் உடைந்த நிலையில் கேட்ச் முறையில் சுரேஷ் ரெய்னா அவுட்டான வீடியோ வைரலாகியுள்ளது.
14-வது ஐபிஎல் தொடரின் இரண்டாம் பாகத்தின் முதலாவது போட்டி நேற்று நடந்தது. சென்னை - மும்பை அணிகள் மோதிய இப்போட்டியில் சென்னை அணி வெற்றி பெற்றது.
இந்த போட்டியில் சி.எஸ்.கே அணியின் முன்னணி நட்சத்திர இடதுகை ஆட்டக்காரர் சுரேஷ் ரெய்னா 6 பந்துகளை சந்தித்து 4 ரன்கள் மட்டுமே எடுத்த நிலையில் ஆட்டமிழந்து வெளியேறினார்.
— Simran (@CowCorner9) September 19, 2021
துவக்கத்திலேயே ஒரு பவுண்டரி அடித்து தனது சிறப்பான பார்மை காண்பித்த சுரேஷ் ரெய்னா தொடர்ச்சியாக ரன்களை குவிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட வேளையில் டிரென்ட் போல்ட் வீசிய பந்தை தூக்கி அடிக்க நினைத்து ஆட்டமிழந்து வெளியேறினார்.
ரெய்னா ஸ்டம்பில் இருந்து சற்று விலகி பேட்டை சுழற்ற பந்து டாப் எட்ஜ் ஆகி பாயிண்ட் திசையில் இருந்த ராகுல் சாகரின் கைகளுக்கு செல்ல ரெய்னா ஆட்டமிழந்து வெளியேறினார்.
அதோடு அவரது பேட்டின் அடிபகுதியில் இருந்த சிறிது பாகமும் உடைந்து விழுந்தது. இதனால் பால் சரியாக கனெக்ட் ஆகாமல் சுரேஷ் ரெய்னா பரிதமாக ஆட்டமிழந்து வெளியேறினார்.