ஐபிஎல் 2022! அவமானப்படுத்தப்பட்ட சுரேஷ் ரெய்னா மீண்டும் களமிறங்குகிறார்... ரசிகர்கள் மகிழ்ச்சி
ஐபிஎல் தொடரில் சுரேஷ் ரெய்னா மீண்டும் களமிறங்கவுள்ளார். ஆனால் இந்த முறை விளையாடும் வீரராக அவர் களமிறங்காமல் புதிய அவதாரம் எடுக்கவுள்ளார்.
ஐபிஎல் கிரிக்கெட் வரலாற்றில் நட்சத்திர வீரராக திகழ்ந்தவர் சுரேஷ் ரெய்னா. சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக பல ஆண்டுகள் சிறப்பான பங்களிப்பை கொடுத்த சுரேஷ் ரெய்னாவை இந்த ஆண்டு ஏலத்தில் அந்த அணி தக்கவைக்கவில்லை.
முற்றிலுமாக புறக்கணிப்பு
சரி ஏலத்திலாவது ரெய்னா தேர்வு செய்யப்படுவார் என்று பார்த்தால் ரெய்னவை சிஎஸ்கே உள்ளிட்ட அனைத்து அணிகளும் புறக்கணித்துவிட்டன. இதனால் ரெய்னா ஏலத்தில் விலைப்போகவில்லை.
இது ரெய்னாவுக்கு இழைக்கப்பட்ட அவமானம் என்று ரசிகர்கள் பலரும் கொதித்தனர். இதன்பின்னர் குஜராத் அணியில் இடம்பெற்றிருந்த ஜேசன் ராய், ஐபிஎல் தொடரிலிருந்து விலகுவதாக அறிவித்தார்.
இதனையடுத்து, அவருக்கு பதிலாக ரெய்னா சேர்க்கப்படுவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் ரெய்னாவை தேர்வு செய்யாமல் ஆப்கானிஸ்தான் வீரர் ஒருவரை அந்த அணி தேர்வு செய்தது. இதனால் ரெய்னா ரசிகர்கள் பெரும் ஏமாற்றம் அடைந்தனர்.
மீண்டும் ஐபிஎல்லில் ரெய்னா
இந்த நிலையில், ஐபிஎல் தொடரில் ரெய்னா புதிய அவதாரம் ஒன்று எடுக்க உள்ளார். ரெய்னாவுக்கு அதிக ரசிகர்கள் பட்டாளம் இருப்பதை உணர்ந்த ஸ்டார் நிறுவனம் அவரை வர்ணனையாளராக ஒப்பந்தம் செய்ய பெரும் தொகையை வழங்க முன்வந்தது.
ரசிகர்களுக்காக அந்த பணியை ஒப்புக்கொண்டுள்ள ரெய்னா, ஐபிஎல் தொடரில் வர்ணனையாளராக களமிறங்குகிறார்.