திட்டம் போட்டு சுரேஷ் ரெய்னாவை கழட்டிவிட்ட CSK அணி? போட்டுடைத்த சேவாக்
ஐபிஎல் தொடரில் எந்த அணியாலும் வாங்கப்படாத சுரேஷ் ரெய்னா குறித்து முக்கிய தகவலை வெளியிட்டுள்ளார் சேவாக்.
ஐபிஎல் போட்டிகள் ஆரம்பித்து இரண்டு நாட்கள் ஆனாலும், கிரிக்கெட் ரசிகர்கள் சுரேஷ் ரெய்னாவை பற்றி தொடர்ந்து பேசி தான் வருகின்றனர். இதற்கு மிக முக்கிய காரணம், முதல் ஐபிஎல் சீசனில் இருந்தே அதிக ரன்களைக் குவித்து, பல சாதனைகளையும் தொடர்ந்து ரெய்னா படைத்து வந்ததால் தான்.
ஐபிஎல் தொடரின் நட்சத்திர வீரரான சுரேஷ் ரெய்னாவை, சென்னை உள்ளிட்ட எந்த அணிகளும் நடந்து முடிந்த ஐபிஎல் ஏலத்தில் எடுக்கவில்லை. இதனையடுத்து தற்போதைய ஐபிஎல் தொடரின் ஹிந்தி வர்ணனையாளாராக ரெய்னா களமிறங்கியுள்ளார்.
இந்நிலையில் இந்திய அணியின் முன்னாள் வீரர் சேவாக், சிஎஸ்கே அணி ரெய்னாவை எடுக்காமல் போனதற்கான காரணம் குறித்து கருத்து தெரிவித்துள்ளார்.
அவர் கூறுகையில், நான் சுரேஷ் ரெய்னாவுக்காக மிகவும் வருத்தப்பட்டேன். சிஎஸ்கே ஜெர்சியில் பல ஆண்டுகள் ஆடியுள்ள ரெய்னா, அந்த அணிக்கு வேண்டியும் நிறைய செய்துள்ளார். இதனால், அவருக்கு 'Farewell' கிடைத்திருக்க வேண்டும் என நான் நினைத்தேன்.
ரெய்னாவின் அடிப்படை விலை குறித்தும், சிஎஸ்கே அணி ஆலோசனை நடத்தி இருக்க மாட்டார்கள் என நான் நினைக்கிறன். அவர்கள் ரெய்னாவை எடுக்க வேண்டாம் என ஏற்கனவே முடிவு செய்து விட்டதாகவே நான் கருதுகிறேன் என கூறியுள்ளார்.
ஏற்கனவே ரெய்னாவை வேண்டுமென்றே சிஎஸ்கே நிர்வாகம் மற்றும் தோனி புறக்கணித்ததாக ரசிகர்கள் குற்றஞ்சாட்டிய நிலையில் சேவாக்கின் இந்த கருத்து முக்கியத்துவம் பெற்றுள்ளது.