நீ எங்களுடன் இருப்பது ஆசிர்வாதம்! மனைவி பிறந்தநாளில் உருகிய சுரேஷ் ரெய்னா
இந்திய கிரிக்கெட் அணி முன்னாள் வீரர் சுரேஷ் ரெய்னா தனது மனைவி பிறந்தநாளுக்கு அழகான வாழ்த்து செய்தியை எழுதியுள்ளார்.
சுரேஷ் ரெய்னா அவ்வபோது சமூகவலைதளங்களில் தனது மனைவி ப்ரியங்கா மற்றும் குழந்தைகளுடன் இருக்கும் புகைப்படங்களை வெளியிடுவார். அந்த வகையில் தற்போது தனது மனைவியுடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு அவருக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
அந்த பதிவில், எங்கள் குடும்பத்தின் தூணுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள். நாங்கள் எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடியிலும் நீ எங்களுடன் இருப்பதை நாங்கள் ஆசீர்வாதமாக கருதுகிறோம்.
நாங்கள் உன்னை மிகவும் நேசிக்கிறோம் என பதிவிட்டுள்ளார். இந்த நெகிழ்ச்சி பதிவையடுத்து ரசிகர்கள் பலரும் ப்ரியங்காவுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர்.
Happy Birthday to the pillar of our family @PriyankaCRaina ❤️. We feel blessed to have you beside us in every step that we take. We love you a lot, now and forever ?
— Suresh Raina?? (@ImRaina) June 17, 2022
Yours,
Rio, Gracia, and Sonu pic.twitter.com/WH6e9k1DxY