ஐபிஎல் மெகா ஏலத்தில் விலை போகாத சுரேஷ் ரெய்னா! துரோகம் இழைத்தாரா CSK கேப்டன் தோனி?
ஐபிஎல் ஏலத்தில் சுரேஷ் ரெய்னாவை எந்தவொரு அணியும் எடுக்காதது ரசிகர்களுக்கு அதிர்ச்சியை கொடுத்துள்ளது.
ஐபிஎல் தொடரில் சென்னை அணிக்காக பல போட்டிகளை வென்று தந்தவர் சுரேஷ் ரெய்னா. அந்த அணியில் தோனிக்கு அடுத்ததாக அதிக ரசிகர்கள் பட்டாளத்தை கொண்டவர் அவர் என கூறினால் அது மிகையாகாது!
இந்த நிலையில், தோனி 2020ஆம் ஆண்டு ஓய்வு பெற்ற போது, தாமும் சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக ரெய்னா அறிவித்தார். 2020ஆம் ஆண்டு ஐபிஎல் சீசன் போது சென்னை அணியில் இருந்து ரெய்னா திடீரென்று வெளியேறினார்.
இந்த ஐபிஎல் சீசனில் ரெய்னாவை சி எஸ் கே நிர்வாகம் தக்கவைக்கவில்லை. இதனால் ரெய்னாவை மற்ற அணிகள் கேப்டனாக நியமிக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் ரெய்னாவை நேற்றைய ஏலத்தில் எந்த அணியும் எடுக்கவில்லை.
Wrong friendship ends whole cricketing career of Raina .
— Ruban Ajith (@rubanr331_ruban) February 13, 2022
Dhoni cheats many of the player like this.if u played other than csk franchises definitely you will be a captain of one franchises. U r wasted time for wrong people @ImRaina @ChennaiIPL @msdhoni pic.twitter.com/a3ejxOb62k
இதனால் விலைபோகாத வீரர்களை தேர்வு செய்து அணிகள் ஏலம் மேற்கொள்ள கோரிக்கை வைத்தால், 2வது முறையாக ஏலம் விடப்படும். தள்ளிவைத்த அணிகள் ஆனால், அப்படி அணிகள் கொடுத்த பட்டியலில் ரெய்னா பெயர் இல்லை.
இதனால் ரெய்னா Blacklist செய்யப்பட்டாரா என்ற சேந்தேகம் எழுந்துள்ளது.
இதனிடையில் தோனி மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் நிர்வாகம் தான் ரெய்னாவை வேண்டுமென்றே புறக்கணித்து முதுகில் குத்திவிட்டதாக ரசிகர்கள் சமூகவலைதளங்களில் குற்றஞ்சாட்டியுள்ளனர்.
If Dhoni has any shame left he should retire. Raina sacrificed his Career to dhoni but CSK can't even afford 2 crores. #ShameOnCSK
— Sai Krishna? (@SaiKingkohli) February 13, 2022