முரட்டுத்தனமானவர்கள் மட்டுமே.. கையில் கர்லா கட்டையுடன் சுரேஷ் ரெய்னா! வீடியோ
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் சுரேஷ் ரெய்னா உடற்பயிற்சி செய்யும் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
2022 ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் களமிறங்குவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அணி நிர்வாகம் சுரேஷ் ரெய்னாவை கைவிட்டது.
205 ஐபிஎல் போட்டிகளில் 5528 ஓட்டங்கள் குவித்துள்ள ரெய்னா தற்போது வர்ணனையாளராக செயல்பட்டு வருவது அவரது ரசிகர்களுக்கு கவலையளித்தது.
இந்த நிலையில், கர்லா கட்டையை வைத்து உடற்பயிற்சி செய்யும் வீடியோ ஒன்றை தனது ட்விட்டர் பக்கத்தில் ரெய்னா பதிவிட்டுள்ளார்.
Things may come to those who wait, but only the things left by those who hustle.#WednesdayMotivation pic.twitter.com/BfeIounef6
— Suresh Raina?? (@ImRaina) April 27, 2022
அதனுடன், 'காத்திருப்பவர்களுக்கு சில விடயங்கள் வந்து சேரலாம், ஆனால் முரட்டுத்தனமாக இருப்பவர்கள் மட்டுமே பொருட்களை விட்டு செல்வார்கள்' என குறிப்பிட்டுள்ளார்.
இதனை தனது ரசிகர்களுக்கு ஊக்கமளிக்கும் வீடியோவாக அவர் பதிவிட்டுள்ளார்.