டி20 உலகக்கிண்ணத்தில் இவர்தான் அதிக ஓட்டங்கள் குவிப்பார்! அடித்துக்கூறும் சுரேஷ் ரெய்னா
இந்திய அணிக்காக சூர்யகுமார் யாதவ் டி20 உலகக்கிண்ணத்தில் அதிக ஓட்டங்கள் குவிப்பார் என்று சுரேஷ் ரெய்னா கணித்துள்ளார்.
சுரேஷ் ரெய்னா கணிப்பு
பிப்ரவரி 7ஆம் திகதி முதல் மார்ச் 8ஆம் திகதி வரை டி20 உலகக்கிண்ணம் நடைபெற உள்ளது.
இந்தியா மற்றும் இலங்கையில் நடைபெற உள்ள இத்தொடருக்காக ஒவ்வொரு அணியும் ஆயத்தமாகி வருகின்றன.
இந்த நிலையில், இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர்கள் பலரும் டி20 உலகக்கிண்ணம் குறித்த தங்களது கணிப்புகளை கூறி வருகின்றனர்.
சூர்யகுமார் யாதவ்
அந்த வகையில் முன்னாள் வீரரான சுரேஷ் ரெய்னா (Suresh Raina), அதிக ஓட்டங்கள் எடுக்கப்போகும் வீரர் இவர்தான் என தனது கணிப்பை தெரிவித்துள்ளார்.

அவரது கணிப்பின்படி, இந்திய டி20 அணியின் தலைவர் சூர்யகுமார் யாதவ் 2026 உலகக்கிண்ணத் தொடரில் அணிக்காக அதிக ஓட்டங்கள் குவிப்பவராக இருப்பார். பதான், உத்தப்பா ஆகியோரும் சூர்யகுமாருக்கு வாக்களித்துள்ளனர்.

ஆனால், கைப் மற்றும் பங்கர் ஆகியோர் திலக் வர்மா இந்தியாவின் அதிக ஓட்டங்கள் குவித்தவர்கள் பட்டியலில் முதலிடம் பிடிப்பார் என கூறுகின்றனர்.
அதே சமயம் அபிஷேக் ஷர்மா அதிக ஓட்டங்களை குவிப்பார் என சோப்ரா, கும்ப்ளே மற்றும் புஜாரா ஆகியோர் தெரிவித்துள்ளனர்.

| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |