மின்னல் வேகத்தில் பறந்து கேட்ச்! வைரலாகும் சுரேஷ் ரெய்னாவின் வீடியோ
அவுஸ்திரேலிய வீரரின் கேட்சை பாய்ந்து பிடித்த சுரேஷ் ரெய்னா
துடுப்பாட்டத்தில் 11 ஓட்டங்கள் மட்டுமே எடுத்த ரெய்னா 2 கேட்களை அபாரமாக செய்தார்
லெஜெண்ட்ஸ் கிரிக்கெட் தொடரில் சுரேஷ் ரெய்னா கேட்ச் பிடித்த வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது.
ராஜ்புரில் அவுஸ்திரேலியா லெஜெண்ட்ஸ், இந்தியா லெஜெண்ட்ஸ் அணிகளுக்கு இடையிலான போட்டி நடந்தது. இந்தப் போட்டியில் இந்தியா லெஜெண்ட்ஸ் அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
அவுஸ்திரேலியா நிர்ணயித்த 172 ஓட்டங்கள் வெற்றி இலக்கை நோக்கி ஆடிய இந்திய அணி, 19.2 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 175 ஓட்டங்கள் எடுத்தது.
அதிகபட்சமாக நமன் ஓஜா 62 பந்துகளில் 5 சிக்ஸர்கள், 7 பவுண்டரிகளுடன் 90 ஓட்டங்கள் விளாசினார். அதிரடியில் மிரட்டிக் கொண்டிருந்த பென் டன்க் 46 ஓட்டங்களில் இருந்தபோது, அவர் அடித்த ஷாட்டை சுரேஷ் ரெய்னா மின்னல் வேகத்தில் பாய்ந்து கேட்ச் செய்தார்.
What a dive. What a catch ?✨@ImRaina you beauty ♥️
— Colors Cineplex (@Colors_Cineplex) September 28, 2022
Dekhte rahiye @India__Legends vs @aussie_legends in the #RoadSafetyWorldSeries now, only on @Colors_Cineplex, @justvoot, Colors Cineplex Superhits and @Sports18. pic.twitter.com/gXMHxd1KTy
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இருந்து கழட்டிவிடப்பட்டதால் சோகத்தில் இருந்த ரெய்னா ரசிகர்கள் இந்த கேட்சை பார்த்து ஆர்ப்பரித்தனர்.
மேலும் இந்த வீடியோவை சமூக வலைதளத்தில் வைரலாக்கி வருகின்றனர்.