தோனி, யுவராஜ் சிங் போல் இவர் TrumpCard வீரர்! டி20 உலகக்கிண்ணத்தில் களமிறக்குங்கள் - சுரேஷ் ரெய்னா
உலகக்கிண்ண தொடருக்கான பிளேயிங் 11யில் ஷிவம் தூபேவை களமிறக்க வேண்டும் என சுரேஷ் ரெய்னா தெரிவித்துள்ளார்.
அமெரிக்கா மற்றும் மேற்கிந்திய தீவுகளில் டி20 உலகக்கிண்ண தொடர் நடைபெற உள்ளது. இதற்கான இந்திய அணியில் ஐபிஎல் தொடரில் மிரட்டிய ஷிவம் தூபே, ஜெய்ஸ்வால் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.
முன்னாள் வீரரான சுரேஷ் ரெய்னா இந்திய அணியின் பிளேயிங் 11யில் இடம்பெற வேண்டும் என கருத்து தெரிவித்துள்ளார். அவர் இதுதொடர்பாக கூறுகையில்,
''என்னைப் பொறுத்தவரை Number 3 வரிசையில் விராட் கோலியை தான் விளையாட வைக்க வேண்டும். அவரின் துடுப்பாட்ட வரிசையில் எந்த மாற்றத்தையும் செய்யக் கூடாது. இந்திய அணியின் Run Machine விராட் கோலி. அதேபோல் ஜெய்ஸ்வால் நல்ல ஃபார்மில் இருக்கிறார்.
தொடக்க வீரராக நிச்சயம் சிறப்பாக செயல்படுவார் என்ற நம்பிக்கை உள்ளது. மேலும், சிறிதும் பயம் இல்லாமல் விளையாடக் கூடிய ஷிவம் தூபேவை, இந்திய அணி நிர்வாகம் எப்படியாவது பிளேயிங் 11க்குள் கொண்டுவர முயற்சிக்க வேண்டும்.
அவரிடம் சிக்ஸர் அடிக்கும் திறமை அபாரமாக உள்ளது. தோனி, யுவராஜ் சிங் போல் Trumpcard வீரர் ஷிவம் தூபே தான். ஆனால், ஜெய்ஸ்வாலை பிளேயிங் லெவனில் கொண்டுவந்தால், நிச்சயம் ஒரு ஆல்ரவுண்டர் வீரரை (தூபே) இழக்க வேண்டிய நிலை வரும்'' என கூறியுள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |