தமிழ் சினிமாவில் அறிமுகமாவது ஏன்? - சுரேஷ் ரெய்னா சொன்ன காரணம்
கிரிக்கெட் வீரர் சுரேஷ் ரெய்னா தமிழ் சினிமாவில் அறிமுகமாகிறார்.
சுரேஷ் ரெய்னா
கிரிக்கெட் ரசிகர்களால் சின்ன தல என அழைக்கப்படுபவர் சுரேஷ் ரெய்னா. 2005 முதல் 2018 ஆம் ஆண்டு வரை இந்திய கிரிக்கெட் அணிக்காக விளையாடினார்.
ஐபிஎல் போட்டிகளில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக 2021 ஆம் ஆண்டு வரை 12 தொடர்களில் விளையாடியுள்ளார். 2021 ஆம் ஆண்டுக்கு பிறகு அனைத்து வகையான கிரிக்கெட்டில் இருந்தும் ஓய்வை அறிவித்தார்.
அடுத்த ஐபிஎல் தொடருக்கு, சுரேஷ் ரெய்னாவை CSK அணியின் துடுப்பாட்ட பயிற்சியாளராக நியமிக்க CSK அணி நிர்வாகம் அவருடன் ஆலோசனை நடத்தி வருகிறது.
தமிழ் சினிமாவில் அறிமுகம்
இந்நிலையில், உத்திரப்பிரதேசத்தில் பிறந்து வளர்ந்த சுரேஷ் ரெய்னா, தமிழ் சினிமாவில் கதாநாயகனாக அறிமுகமாகிறார்.
Dream Knight Stories என்ற தயாரிப்பு நிறுவனம், தனது முதல் திரைப்படமாக இதை தயாரிக்கிறது. லோகன் இயக்கத்தில் உருவாக உள்ள இந்த படத்திற்கு, சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார்.
இந்த படத்தின் அறிமுக காணொளியை, கிரிக்கெட் வீரர் சிவம் துபே வெளியிட்டார். இதில் இயக்குநர் மோகன் ராஜா, நடிகர் சதீஷ், எடிட்டர் மோகன் ஆகியோர் உள்பட பலரும் விருந்தினர்களாக கலந்து கொண்டனர்.
From cricket fields to Kollywood frames bringing Chennai’s spirit with me.
— Suresh Raina🇮🇳 (@ImRaina) July 4, 2025
Proud to join this new journey with @DKSoffl @kgfsportz #DKSProductionNo1 #DreamKnightStories#KGFEntertainment https://t.co/JdC8kYh3C3
இதை தொடர்ந்து வீடியோ காலில் பேசிய சுரேஷ் ரெய்னா, " தமிழகத்தில்தான் விசில் போடு ஆர்மி இருக்கிறது. இங்கு சென்னைக்காக நான் பல போட்டிகளில் விளையாடி இருக்கிறேன்.
ரசிகர்களின் அன்பும், ஆதரவும் எனக்கு கிடைத்திருக்கிறது. சென்னையில் கடற்கரை, ரசம் எல்லாமே எனக்கு ரொம்ப பிடிக்கும். அதனால்தான் தமிழில் நடிக்கிறேன். இனிமேதான் ஆட்டம் ஆரம்பம்"என கூறினார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |