ஐபிஎல் போட்டிகளில் இருந்து சுரேஷ் ரெய்னா ஓய்வு என தகவல்! ரசிகர்கள் ஷாக்
ஐபிஎல் போட்டிகளில் இருந்து சுரேஷ் ரெய்னா ஓய்வு என தகவல்.
மொத்தம் 205 போட்டிகளில் விளையாடி 5528 ரன்களை அவர் குவித்துள்ளார்.
சுரேஷ் ரெய்னா ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் இருந்து ஓய்வு பெற்றுள்ளார் என தகவல்கள் வெளியாகியுள்ளது.
இந்திய கிரிக்கெட் அணி வீரர் சுரேஷ் ரெய்னா கடந்த 2019ல் தேசிய அணியில் இருந்து ஓய்வு பெற்றார். இருந்த போதிலும் ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடி வந்தார்.
அந்த அணியின் நட்சத்திர வீரராக திகழ்ந்த ரெய்னா மொத்தம் 205 போட்டிகளில் விளையாடி 5528 ரன்களை குவித்துள்ளார். இருந்த போதிலும் இந்தாண்டு நடைபெற்ற ஐபிஎல் தொடரில் அவர் எந்த அணியாலும் ஏலத்தில் வாங்கப்படவில்லை.
dnaindia
முக்கியமாக சென்னை அணி அவரை புறக்கணித்தது ரசிகர்களுக்கு கோபத்தை ஏற்படுத்தியது, ஜாம்பவானை இப்படியா அவமானப்படுத்துவீர்கள் என அவர்கள் ஆதங்கப்பட்டனர்.
இந்த நிலையில் உள்நாட்டு மற்றும் ஐபிஎல் போட்டிகளில் இருந்து சுரேஷ் ரெய்னா ஓய்வு பெறுகிறார் என தகவல் வெளியாகியுள்ளது.
அதே நேரத்தில் தென்னாப்பிரிக்கா, இலங்கை மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸில் நடைபெறும் டி20 போட்டிகளில் பங்கேற்பது தொடர்பாக அந்த அணிகளின் உரிமையாளர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.