சென்னை அணியில் மீண்டும் ரெய்னா? - இன்று கடைசி வாய்ப்பு
பெங்களூருவில் நேற்று நடைபெற்ற ஐபிஎல் ஏலத்தில் முன்னாள் சென்னை அணி வீரர் சுரேஷ் ரெய்னாவை அந்த அணி மீண்டும் ஏலத்தில் எடுக்காதது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஐபிஎல் தொடரின் 15-வது சீசனுக்கான வீரர்கள் ஏலம் பெங்களூரில் 2 நாட்கள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. நேற்று நடைபெற்ற ஏலத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் தங்கள் அணியில் ஏற்கனவே விளையாடிய பிராவோ, அம்பத்தி ராயுடு, தீபக் சாஹர் ஆகிய வீரர்களை ஏலத்தில் எடுத்துள்ளது.
பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட டு பிளசிஸை பெங்களூரு அணி ஏலத்தில் எடுக்க சின்ன தல என ரசிகர்களால் செல்லமாக அழைக்கப்படும் ரெய்னாவை சென்னை அணி உட்பட எந்த அணியும் ஏலத்தில் எடுக்க விரும்பவில்லை. இது ஐபிஎல் ரசிகர்களை அதிர்ச்சி அடைய வைத்தது.
கடந்த 2020 ஆம் ஆண்டு நடந்த ஐபிஎல் தொடரின்போது சென்னை அணி நிர்வாகத்துடன் தனக்கு பால்கனி உள்ள அறை கொடுக்கவில்லை என சுரேஷ் ரெய்னாவுக்கு உரசல் ஏற்பட்டதாக கூறப்பட்டது. இதனிடையே நேற்றைய ஏலத்தில் எடுக்கப்படாத வீரர்கள் இன்று அவர்களது அடிப்படை விலையில் எடுத்துக்கொள்ள ஒரு வாய்ப்பு வழங்கப்படும். அப்போது சுரேஷ் ரெய்னாவை சென்னை அணி எடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.