சுவிட்சர்லாந்தில் மருத்துவமனையை நாடுவோர் எண்ணிக்கை திடீரென்று அதிகரிப்பு: எச்சரிக்கும் நிபுணர்கள்
சுவிட்சர்லாந்தில் புதிய கொரோனா மாறுபாடு காரணமாக மருத்துவமனையை நாடுவோர் எண்ணிக்கை திடீரென்று அதிகரித்திருப்பது கவலையை அளிப்பதாக நிபுணர்கள் தரப்பு எச்சரித்துள்ளது.
சுட்சர்லாந்தில் கடந்த 10 நாட்களில் ஓமிக்ரான் மாறுபாடு பரவல் அதிகரித்திருப்பது, சமீபத்திய தரவுகளில் வெளிப்படையாக இல்லை என்றாலும், தொற்று எண்ணிக்கை அதிகரித்திருப்பது தாக்கத்தை ஏற்படுத்துமா என்பதில் நிபுணர்கள் சந்தேகம் எழுப்பியுள்ளனர்.
கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு பின்னர் தொற்றாளர்களின் எண்ணிக்கை பெருமளவில் அதிகரித்துள்ளது. மருத்துவமனையை நாடுவோர் எண்ணிக்கை அதிகரித்திருப்பது புதிய நெருக்கடியை உருவாக்கும் வாய்ப்புகளும் அதிக என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
ஆனால் மருத்துவமனைகளில் இருந்து வெளியாகும் தகவல் வெளிப்படையாக இல்லை என்கிறார் நிபுணர் ஒருவர். இருப்பினும், பல ஊழியர்கள் நோய் பாதிப்பு காரணமாக விடுப்பில் சென்றிருப்பது, ஊழியர்கள் தட்டுப்பாட்டை உருவாக்கும் என நிபுணர்கள் குறிப்பிடுகின்றனர்.
மட்டுமின்றி, சமீபத்திய தரவுகளின் அடிப்படையில், தடுப்பூசி போட்டுக்கொண்டவர்களுக்கே ஓமிக்ரான் பாதிப்பு அதிகம் கண்டுவருவதாக நிபுணர் ஒருவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
மேலும், பல மாநிலங்களில் பண்டிகை கால விடுமுறைக்கு பின்னர் பள்ளிகள் திறந்து செயல்பட துவங்கியுள்ளது.
இந்த கட்டத்தில் சிறார்களின் நிலைமை கவலை கொள்ளும் வகையில் உள்ளது எனவும், மிக குறைவான எண்ணிக்கையிலான சிறார்களுக்கே தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாகவும் அரசாங்க ஆலோசகர் ஒருவர் சுட்டிக்காட்டியுள்ளார்.