அமேசான் காட்டுக்குள் உயிருடன் கண்ணில் நுழைந்த “மனித பூச்சி”! திடுக்கிட வைக்கும் சம்பவம்
அமெரிக்காவை சேர்ந்த 32 வயது மதிக்கத்தக்க பெண்ணின் உடலில் இருந்து 3 உயிருள்ள ஒட்டுண்ணிகளை இந்திய மருத்துவர்கள் அகற்றியுள்ளனர்.
அமெரிக்காவை சேர்ந்த பெண் ஒருவர் கடந்த ஒரு மாதமாகவே, வலது கண்ணில் வீக்கம் மற்றும் அரிப்பால் அவதிப்பட்டுள்ளார்.
இதே தொந்தரவு முதுகிலும், கையிலும் ஏற்பட்டுள்ளது, எதனால் இப்படி இருக்கிறது என குழம்பி போன அப்பெண் மருத்துவரை அணுகிய போது ஒவ்வாமை பிரச்சனையாக இருக்கலாம் என கூறியுள்ளனர்.
இருப்பினும் அந்த அறிகுறிகள் தொடர்ந்து கொண்டே இருந்துள்ளது, இந்நிலையில் இந்தியாவுக்கு சுற்றுலா வந்துள்ளார்.
இதுகுறித்து அவரது நண்பர்களிடம் கூறவும், டெல்லியில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர்.
அங்கு அவரது உடலில் ஏதோ அசைவதை கண்ட மருத்துவர்கள், 3 ஒட்டுண்ணிகள் இருப்பதை கண்டறிந்தனர்.
அப்பெண்ணிடம் விசாரித்ததில், அமேசான் காட்டுக்குள் சென்றது தெரியவந்தது, அங்கு தான் மனித பூச்சி என்று அழைக்கப்படும் human botflies அவரது உடலுக்குள் ஊடுறுவி உள்ளதும் தெரியவந்தது.
நமக்கே தெரியாமல் நம் உடலுக்குள் ஊடுறுவும் அந்த ஒட்டுண்ணி, உடலை சிதைத்து பெரிய சிக்கல்களை ஏற்படுத்திவிடும்.
எனவே உடனடியாக அப்பெண்ணுக்கு அறுவைசிகிச்சை செய்த மருத்துவர்கள், ஒட்டுண்ணிகளை அகற்றினர்.