பூர்வக்குடியின பெண்களுக்கு கட்டாய கருத்தடை அறுவை சிகிச்சை... கனடாவில் தொடரும் அராஜகம்
கனடாவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள பூர்வக்குடியின குழந்தைகள் மரணம் தொடர்பான பிரச்சினையைத் தொடர்ந்து, பூர்வக்குடியின பெண்களுக்கு கட்டாய கருத்தடை அறுவை சிகிச்சை செய்யப்படுவது குறித்த பிரச்சினை எழுப்பப்பட்டுள்ளது.
2001ஆம் ஆண்டு, Saskatoonஇல் பிரசவத்திற்காக வந்துள்ளார் ஒரு பூர்வக்குடியின பெண். பிரசவித்த பின்னரும், அவரை அறுவை சிகிச்சை அறையிலிருந்து வெளியேறவிடாமல் தடுத்திருக்கிறார்கள் மருத்துவர்கள். சக்கர நாற்காலியில் அமர்ந்து தானே வெளியேற முயன்ற அந்த பெண்ணை மருத்துவர் ஒருவர் மீண்டும் அறுவை சிகிச்சை அறைக்கு தள்ளிச் சென்றிருக்கிறார்.
அங்கே அவருக்கு கட்டாய கருத்தடை அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது, அவரது சம்மதம் இல்லாமலே... இதேபோல பாதிக்கப்பட்ட 16 பெண்கள், மனித உரிமைகளுக்காக செனேட் கமிட்டி முன் ஆஜராகி, தங்களுக்கு இழைக்கப்பட்ட கொடுமையைக் குறித்து விவரித்திருக்கிறார்கள்.
1970கள் வரை சுமார் 1,150 பூர்வக்குடியின பெண்களுக்கு இந்த அநீதி இழைக்கப்பட்டுள்ளது. அது முன்பு நடந்த விடயம் என அமைதியாக இருக்க முடியவில்லை. காரணம், அந்த அநீதி இன்னும் முடியவில்லை. இந்த வாரம், செவ்வாயன்று வெளியிடப்பட்ட மனித உரிமைகளுக்காக செனேட் கமிட்டியின் அறிக்கை ஒன்று, பூர்வக்குடியின பெண்களுக்குச் செய்யப்படும் கட்டாயக் கருக்கலைப்பு கடந்த கால விடயம் அல்ல, அது இப்போதும் கனடாவில் தொடர்கிறது என்று கூறியுள்ளது.
ஆகவே, இந்த பிரச்சினை தொடர்பாக தாங்கள் நடவடிக்கை எடுக்கும்போது, நாடளுமன்ற
உறுப்பினர்கள் அதை புரிந்துகொள்ளவேண்டும் என்று கூறியுள்ளார் கமிட்டியின்
தலைவரான Salma Ataullahjan.