அறுவை சிகிச்சை மூலம் மூக்கில் இருந்து நீக்கப்பட்ட 150 புழுக்கள் (காணொளி)
அமெரிக்காவை சேர்ந்த ஒருவரின் மூக்கில் இருந்து 150 புழுக்கள் அறுவை சிகிச்சை மூலம் வெளியேற்றப்பட்டுள்ளது.
மூக்கில் குடியிருந்த 150 புழுக்கள்
அமெரிக்காவின் புளோரிடா என்ற பகுதியில் வசிக்கும் நபர் ஒருவருக்கே இந்த அறுவை சிகிச்சையானது நடத்தப்பட்டுள்ளது.
கடந்த அக்டோபர் மாதம் மூக்கில் இருந்து ரத்தம் கசிந்ததால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்தார்.
மூக்கில் இருந்து இரத்தம் கசிந்ததன் காரணமாக, முகம் முழுவதும் வீக்கம் ஏற்பட்டுள்ளது. பேசக்கூடாத முடியாத நிலையில் இருந்துள்ளார்.
இதன் பின்னர் பரிசோதனை செய்து பார்த்த மூலம் மூக்கின் அடி குழி பகுதியில் புழுக்கள் குடியிருப்பது தெரியவந்துள்ளது.
பின் அறுவை சிகிச்சை மூலம் அவரின் மூக்கின் குழியில் இருந்து சுமார் 150 புழுக்களை உயிருடன் எடுக்கப்பட்டுள்ளது.
மேலும் இந்த புழுக்களானது மூளைக்கு மிக அருகில் இருந்துள்ளதாக வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.
இது குறித்து அறுவை சிகிச்சை செய்த வைத்தியர் பேசிய போது, ஒவ்வொரு புழுவும் ஒவ்வொரு அளவில் இருந்ததாகவும், அதில் பெரிய புழுக்கள் சுண்டு விரல் அளவு இருந்ததாகவும் தெரிவித்துள்ளார்.
மேலும் இது எப்படி மூக்கில் உருவாகின என்பது குறித்து தெரியவில்லை என பாதிக்கப்பட்ட நபர் கூறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |