கவின் ஆணவக்கொலை வழக்கில் சுர்ஜித்தின் தாயார் கைது
திருநெல்வேலி ஐடி ஊழியர் கவின் ஆணவக்கொலை வழக்கில் சுர்ஜித்தின் தாயார் எஸ்.ஐ கிருஷ்ணகுமாரி கைது செய்யப்பட்டார்.
கவின் ஆணவக்கொலை
தமிழகத்தை உலுக்கிய கவின் ஆணவக்கொலை வழக்கில் சுர்ஜித் மற்றும் அவரது தந்தை எஸ்.ஐ சரவணன் கைது செய்யப்பட்டனர்.

இந்த வழக்கை உயர்நீதிமன்ற மதுரை கிளையின் உத்தரவின் பேரில் சிபிசிஐடி பொலிஸாருக்கு மாற்றம் செய்யப்பட்டது.
அதனைத் தொடர்ந்து கைது செய்யப்பட்ட சுர்ஜித், சரவணன் ஆகியோரை காவலில் எடுத்து சிபிசிஐடி பொலிஸார் விசாரணை நடத்தினர்.
இந்த நிலையில், இந்த விசாரணை வழக்கில் புதிய திருப்பமாக சுர்ஜித்தின் பெரியம்மா மகனான ஜெயபால் (29) என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
அத்துடன் வழக்கில் 4வது நபராக சுர்ஜித்தின் தாய் எஸ்.ஐ கிருஷ்ணகுமாரியையும் சிபிசிஐடி பொலிஸார் அதிரடியாக கைது செய்துள்ளனர்.

| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |