சினேகன் மனைவிக்கு திருமணத்தில் கொடுக்கப்பட்ட வித்தியாசமான பரிசு! ஆசையுடன் திறந்த அவருக்கு காத்திருந்த இன்ப அதிர்ச்சி
பிரபல பாடலாசிரியர் சினேகன் திருமணத்தின் போது, அவருடைய மனைவிக்கு மறக்க முடியாத திருமண பரிசு கிடைத்துள்ளது.
கடந்த ஜுலை மாதம் 29-ஆம் திகதி சென்னையில் பிரபல பாடலாசிரியரான சினேகன் மற்றும் நடிகை கன்னிகாவுக்கும் திருமணம் நடைபெற்றது. இந்த திருமணத்தை நடிகர் கமல்ஹாசன் முன்னின்று நடத்தி வைத்தார்.
அதுமட்டுமின்றி திரைப்பிரபலங்கள் பலர் இந்த திருமணத்தில் கலந்து கொண்டனர். இந்நிலையில், திருமணத்தின் போது, கன்னிகாவுக்கு எப்போதும் மறக்க முடியாத வகையில் பரிசு கிடைத்துள்ளது. அது அவரை இன்ப அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
அதாவது, அவர் நடித்து வரும் ஹெல்ப் மீ என்ற படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழுவினர், சர்ப்பிரைஸாக ஒரு திருமண பரிசு போன்று கொடுத்துள்ளனர். திருமணம் முடிந்த கையோடு புதுமணத் தம்பதிகள் இந்த போஸ்டரை திருமண மேடையிலேயே வெளியிட்டனர்.
இதை கன்னிகா தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
மேலும், அவர் நடித்து வரும் இந்த படத்தை ஷங்கர் வுட்டி என்பவர் இயக்கி வருகிறார். சம்பத்ராம் என்பவர் ஹீரோவாகவும், சூர்யா என்பவர் இசையமைத்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.