மும்பை கிரிக்கெட் மைதானத்திற்கு சர்ப்ரைலஸ் விசிட் கொடுத்த சூப்பர் ஸ்டார்! வைரலாகும் புகைப்படம்
17 ம் திகதி மார்ச் அதாவது நேற்றைய தினம் மும்பை கிரிக்கெட் மைதானத்திற்கு சூப்பர் ஸ்டார் ரஜினி காந்த் அவர்களின் சர்பரைஸ் விசிட் அனைவரையும் மிரள வைத்தது.
மும்பையில் நடைபெற்ற இந்தியா-ஆஸ்திரேலியா இடையேயான ஒரு நாள் கிரிக்கெட் போட்டியை கண்டு களிப்பதற்காக, அவர் மற்றும் அவரின் மனைவி லதா ரஜினிகாந்த் இருவரும் சென்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
ஒரு நாள் கிரிக்கெட் போட்டிக்கான முதல் நாள் அழைப்பினை மும்பை கிரிக்கெட் அசோசியேஷன் நடிகர் ரஜினிகாந்த் அவர்களுக்கு அனுப்பியுள்ளது.
அவர் அந்த அழைப்பினை ஏற்று நேற்றைய தினம்( 17)வருகை வான்கடே மைதானத்திற்கு சென்றார்.
அது தொடர்பான காணொளிகள் மற்றும் புகைபடங்கள் வைரலாகியுள்ள நிலையில் அவரின் ரசிகர்களுக்கு அது பேரின்ப அதிர்ச்சியாக தந்துள்ளது.
அதுமட்டுமல்லாது கிரிக்கெட் வீரர்களுக்கும் இது உற்சாகத்தை அளித்துள்ளது.
ரஜினிகாந்த் அவர்கள் மும்பை கிரிக்கெட் அசோசியேஷன் தலைவர் அமோல் காலேயோடு உரையாடும் புகைப்படங்கள் வெளியாகியுள்ளன.
அது மட்டுமில்லாது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்திற்கு பிடித்த விளையாட்டு கிரிக்கெட் என்பது குறிப்பிடத்தக்கது.
அவரையும் அவரது மனைவியையும் பூங்கொத்து கொடுத்து விமான நிலையத்தில் வரவேற்ற புகைப்படங்கள் மற்றும் அவர் ஸ்டைலாக அமர்ந்து கிரிக்கெட் பார்க்கும் புகைப்படங்களும் இணையத்தில் ஒரு கலக்கு கலக்குகின்றன என்றுதான் சொல்ல வேண்டும்.
Today postive Vibes ??? நாம சொல்ல வேண்டாம் நாடே இவர் தான் சூப்பர் ஸ்டார் சொல்லுகிறார்கள் வேறு என்ன வேண்டும் தலைவர் ரசிகர்கள் அனைவருக்கும் இது ஒன்றே போதும் ?????????????????? #Jailer #Rajinikanth? pic.twitter.com/x9JzPuT7hh
— ஜெயிலர்SakthiVelRajMIthra pandi Sri (@Sakrevathi09) March 18, 2023