ஜேர்மன் சேன்ஸ்லர் வெளியிட்ட ஆச்சரிய புகைப்படம் ஒன்று : பின்னணியில் ஒரு சுவாரஸ்ய தகவல்
சமீபத்தில் அமெரிக்கா சென்றிருந்த ஜேர்மன் சேன்ஸ்லர் வெளியிட்ட புகைப்படம் ஒன்று, புருவம் உயர்த்தச் செய்துள்ள நிலையில், அதன் பின்னாலுள்ள சுவாரஸ்ய தகவல் வெளியாகியுள்ளது.
இதில் யார், யார்?
சமீபத்தில் ஜேர்மன் சேன்ஸலரான ஓலாஃப் ஷ்ல்ஸ், அமெரிக்கா சென்றிருந்தார். அப்போது அவர், Delaware மாகாண செனேட்டரான கிறிஸ் கூன்ஸ் (Chris Coons) என்பவரை சந்தித்தார்.

SENATOR CHRIS COONS ON X
இருவரும் ஒன்றாக செல்பி எடுத்துக்கொண்டார்கள். அதை எக்ஸில் வெளியிட்ட கிறிஸ், இதில் யார், யார்? என நகைச்சுவையாக கேள்வி எழுப்பியுள்ள நிலையில், என்னைப்போலவே இருக்கும் ஒருவரை மீண்டும் சந்தித்ததில் மிக்க மகிழ்ச்சி என குறிப்பிட்டுள்ளார் ஓலாஃப்.
விடயம் என்னவென்றால், இருவரும் பார்ப்பதற்கு ஒரே போல இருக்கிறார்கள். அவர்கள் முகம், சிரிப்பு, தலைமுடி என எல்லாமே நகல் எடுத்ததுபோல உள்ளன!
Wer ist wer? https://t.co/TNlG3c9kuO pic.twitter.com/wEkY5LZgRo
— Senator Chris Coons (@ChrisCoons) February 9, 2024
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |