லண்டனில் வாழ்வதைவிட பாரீஸிலிருந்து வந்துபோவதே இலாபம்: பிரித்தானியர் ஒருவர் அளிக்கும் ஆச்சரிய புள்ளிவிவரம்
லண்டனில் வங்கி ஒன்றில் பணியாற்றும் பிரித்தானியர் ஒருவர், லண்டனில் வாழ்வதைவிட, பாரீஸிலிருந்து லண்டனுக்கு வேலைக்கு வந்து செல்வது இலாபம் என்கிறார்.
அவர் வெளியிட்டுள்ள புள்ளி விவரங்கள் உண்மையாகவே ஆச்சரியத்தை அளிக்கின்றன.
ஒரு முக்கிய விடயம், அந்த நபருக்கு வாரத்தில் இரண்டு நாட்கள் மட்டுமே வேலை!
ஆக, லண்டனில் வீடு ஒன்றை வாடகைக்குப் பிடித்து அந்த வீட்டில் வாழ்வதைவிட, பாரீஸில் வீடு ஒன்றை வாடகைக்கு எடுத்து, வாரத்தில் இரண்டு முறை லண்டனுக்கு வேலைக்கு வந்து செல்வது இலாபம் என்கிறார் அவர்.
அதாவது, லண்டனில் ஒரு படுக்கையறை கொண்ட வீடு ஒன்றின் மாத வாடகை 1,784 பவுண்டுகள் ஆகும்.
Image: Getty Images
அதுவே, பாரீஸில் அதே ஒரு படுக்கையறை கொண்ட வீட்டின் வாடகை 1,130 பவுண்டுகள்தான்.
சரி, பாரீஸிலிருந்து லண்டனுக்கு பயணம் செய்யவேண்டுமே!
அதற்கும் விளக்கமளிக்கிறார் அவர். அதாவது, ஒருமுறை பாரீஸிலிருந்து லண்டனுக்கு ரயிலில் வந்து செல்ல 77 பவுண்டுகள் கட்டணம். அவர் வாரத்தில் இரு நாட்கள் லண்டன் வரவேண்டும். அதற்கான கட்டணம் 154 பவுண்டுகள். மாதம் ஒன்றிற்கு 616 பவுண்டுகள்.
ஆக, வாடகை 1,130 பவுண்டுகள், பயணச் செலவு 616 பவுண்டுகள். மொத்தச் செலவு 1746 பவுண்டுகள் மட்டுமே. அதாவது லண்டன் வீட்டு வாடகையைவிட, இந்த தொகை 38 பவுண்டுகள் குறைவு. லண்டனில் வீட்டு வாடகை மட்டுமே 1,784 பவுண்டுகள்.
ஆகவேதான், லண்டனில் வாழ்வதைவிட, தினமும் பாரீஸிலிருந்து லண்டனுக்கு வேலைக்கு வந்து செல்வது இலாபம் என்கிறார் அவர்.