தீபாவளியை கொண்டாடும் வகையில் அஞ்சல்தலை வெளியிட இந்தியரை அணுகிய கனேடிய தபால் துறை
நாற்பது ஆண்டுகளுக்கு முன், தான் கனடாவுக்கு குடிபெயர்ந்தபோது, கிறிஸ்துமஸ், ஈஸ்டர் முதலான பண்டிகைகள் கொண்டாடப்பட்டதேயொழிய தீபாவளிப் பண்டிகை கொண்டாடப்படவேயில்லை என்கிறார் கமல் ஷர்மா.
1978 மற்றும் அதற்குப் பிந்தைய சில பத்தாண்டுகளில் சிலர் மட்டுமே தீபாவளி கொண்டாடினார்கள், அதுவும் வீட்டளவில் மட்டுமே என்கிறார் அவர்.
தற்போது, தீபாவளியைக் கொண்டாடும் வகையில் அஞ்சல்தலை (stamp) ஒன்றை வெளியிட முடிவு செய்துள்ள கனேடிய தபால் துறை, அதை உருவாகுவதற்காக, 1983 முதல் தெற்காசிய கலாச்சாரத்தை முன்னிறுத்தும் வகையில் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் சிலவற்றை நடத்திய ஷர்மா உட்பட சிலரின் ஆலோசனையை நாடியுள்ளது.
2017 முதல் இரண்டு முறை தீபாவளி அஞ்சல்தலைகள் வெளியிடப்பட்டது உண்மைதான். ஆனால், அது தொடர்பில் தெற்காசிய சமுதாயத்தினரை தபால் துறை நாடியுள்ளது இதுதான் முதல் முறை என்கிறார் ஷர்மா.
இது, கனடாவில் பெருமளவில் காணப்படும் தெற்காசிய சமூகத்தினரின் முக்கியத்துவத்தை காட்டுவதாக நான் கருதுகிறேன் என்று கூறும் ஷர்மா, அத்துடன் இது கனடாவின் பெரும்பகுதிகளில் கொண்டாடப்படும் தீபாவளியையும் தெற்காசிய சமூகத்தையும் அங்கீகரிக்கும் ஒரு செயலும் ஆகும் என்கிறார்.
ஷர்மா, சர்ரேயில் அமைந்துள்ள KVP Entertainers, KVP Heritage மற்றும் Kamal's Video Palace ஆகிய நிறுவனங்களின் தலைவர் என்பதுடன், அவர் தொலைக்காட்சி நிகழ்ச்சி தொகுப்பாளர் முதலான பன்முகத்தன்மை கொண்டவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.