சூர்யா- ஜோதிகா மகளின் 12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு மதிப்பெண்: எவ்வளவு தெரியுமா?
சூர்யா ஜோதிகா தம்பதியின் மகள் தியாவின் 12-ஆம் வகுப்பு பொது தேர்வு மதிப்பெண் இணையத்தில் வைரலாகி வருகிறது.
சூர்யா - ஜோதிகா
தமிழ் சினிமாவின் பிரபல நட்சத்திர தம்பதிகளாக வலம் வருபவர்கள் சூர்யா ஜோதிகா.
சூர்யா ஜோதிகா இருவருக்கும் 2007-ஆம் திருமணம் நடந்து முடிந்தது. இவர்களுக்கு தியா என்ற மகளும் தேவ் என்ற மகனும் உள்ளனர்.
திருமணத்திற்கு பிறகு படங்களில் நடிக்காத ஜோதிகா தற்போது மீண்டும் திரைப்படங்களில் தனது அசத்தலான நடிப்பை வெளிப்படுத்தி வருகிறார்.
சூர்யாவின் பான் இந்தியா படமான கங்குவா திரைப்படம் விரைவில் திரைக்கு வரவுள்ளது குறிப்பிடத்தக்கது.
தியாவின் மதிப்பெண்
இந்நிலையில், சூர்யா ஜோதிகா தம்பதியின் மகள் தியா 12-ஆம் வகுப்பு பொது தேர்வு எழுதியிருக்கிறார்.
இன்று 12-ஆம் வகுப்பு பொது தேர்வுக்கான முடிவுகள் வெளியாகியுள்ளது. இதில் தியா எடுத்துள்ள மதிப்பெண் பற்றி தகவல் வெளியாகியுள்ளது.
அதில், தமிழ் 96, ஆங்கிலம் 97, கணக்கு -94, பிசிக்ஸ் -99, கெமிஸ்ட்ரி -98, கம்பியூட்டர் சயின்ஸ் 97, என மொத்தம் 600க்கு 581 மதிப்பெண் எடுத்துள்ளார் தியா.
சூர்யா ஜோதிகாவின் மகள் தியா எடுத்த மதிப்பெண்களை ரசிகர்கள் இணையத்தில் வைரலாக்கி வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |