குழந்தை ராமர் நெற்றியில் சூரிய பகவான் - அயோத்தியில் நிகழ்ந்த அதிசயம் (வீடியோ)
உத்தரப்பிரதேச மாநிலத்தில் உள்ள அயோத்தி ராமர் கோயிலில் அதிசய நிகழ்வு நிகழ்ந்துள்ளது.
அயோத்தியில் நிகழ்ந்த அதிசயம்
ராமர் கோயிலில் தற்போது ராமநவமி விழா நடைபெற்று வருகிறது.
இந்த விழாவின் 9 ஆவது நாளாக இன்று சூரிய அபிஷேக மகோற்சவம் நடைபெற்று வருகிறது.

இதில் பகல் 12.16 மணிக்கு கருவறையில் வீற்றிருக்கும் குழந்தை ராமர் சிலையின் மீது சூரிய பகவான் திலகம் வடிவில் தோற்றமளிப்பார் என தெரிவிக்கப்பட்டிருந்தது.
அதன்படி அந்நிகழ்வானது தற்போதை நடந்து முடிந்துள்ளது. பால ராமரின் நெற்றியில் 75 மில்லி மீட்டர் அளவுக்கு திலகம் போல் சூர்ய பகவானின் கதிர்கள் தென்பட்டுள்ளது.
இது சுமார் 5 நிமிடங்கள்வரை நீடித்துள்ளன. இதை காண்பதற்காக ஆயிரக்கணக்கான பக்தர்கள் கூடியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
#WATCH | ‘Surya Tilak’ illuminates Ram Lalla’s forehead at the Ram Janmabhoomi Temple in Ayodhya, on the occasion of Ram Navami.
— ANI (@ANI) April 17, 2024
(Source: DD) pic.twitter.com/rg8b9bpiqh
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |