33 பந்துகளில் 50 ஓட்டங்கள்.. இவர் தான் சிறந்த வீரர் எனக் கூறிய தென் ஆப்பிரிக்க ஆல்ரவுண்டர்
சூர்யகுமார் யாதவ் டி20 போட்டிகளில் அதிரடியாகவும், பொறுப்பான ஆட்டத்தையும் வெளிப்படுத்தி வருகிறார்
32 டி20 போட்டிகளில் விளையாடியுள்ள சூர்யகுமார், ஒரு சதம் மற்றும் 8 அரைசதங்களுடன் 976 ஓட்டங்கள் எடுத்துள்ளார்
இந்தியாவில் தென் ஆப்பிரிக்க அணி சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இரு அணிகளுக்கும் இடையிலான இரண்டாவது டி20 போட்டி நாளை நடக்க உள்ளது.
முதல் போட்டியில் சூர்யகுமாரின் அதிரடியாக 33 பந்துகளில் 50 ஓட்டங்கள் விளாசினார். இந்தப் போட்டியில் இந்திய அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
BCCI
தென் ஆப்பிரிக்க பந்துவீச்சாளர் வெய்ன் பர்னெல் சிறப்பாக பந்துவீசி 14 ஓட்டங்கள் மட்டுமே விட்டுக் கொடுத்தார். இந்த நிலையில் அவர் இந்திய அணியின் துடுப்பாட்ட வீரர் சூர்யகுமார் யாதவ் குறித்து கூறுகையில்,
'கடந்த சில மாதங்களாக கவனிக்கும்போது, தற்போதைய சூழ்நிலையில் உலகின் சிறந்த டி20 துடுப்பாட்ட வீரர் சூர்யகுமார் தான் என நான் தனிப்பட்ட முறையில் கருதுகிறேன். அவர் 360 டிகிரியிலும் ஓட்டங்களை அடிக்கிறார். இதனால் அவரை கட்டுப்படுத்துவது பந்துவீச்சாளர்களுக்கு சிரமம் ஏற்படுகிறது' என தெரிவித்துள்ளார்.
மேலும் சூர்யகுமார் நல்ல கிரிக்கெட்டை விளையாடுவதாக பர்னெல் குறிப்பிட்டார்.
AP