தினேஷ் கார்த்திக்கினால் எனது இடத்திற்கு ஆபத்து.. இந்திய அணியின் துடுப்பாட்ட வீரர்
கடைசி போட்டியில் சொதப்பினாலும் சூர்யகுமார் யாதவ் தொடர் நாயகன் விருதை பெற்றார்
தினேஷ் கார்த்திக் நேற்றைய போட்டியில் 4 சிக்ஸர்கள் மற்றும் 4 பவுண்டரிகளை பறக்கவிட்டார்
தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான போட்டியில் தினேஷ் கார்த்திக் ஆடிய விதத்தை பார்க்கும் போது, தனது இடத்திற்கு ஆபத்து வந்துவிடுமோ என்பது போல் இருந்ததாக சூர்யகுமார் யாதவ் கூறியுள்ளார்.
இண்டூரில் நடந்த டி20 போட்டியில் ரோகித் சர்மா, ஷ்ரேயாஸ் ஐயர் ஆகியோர் சொதப்பிய நிலையில், சரவெடியாய் வெடித்த தினேஷ் கார்த்திக் 21 பந்துகளில் 46 ஓட்டங்கள் விளாசினார்.
AP
அவர் இன்னும் சில ஓவர்கள் களத்தில் நின்றிருந்தால் இந்திய அணி வெற்றி பெற்றிருக்கும் வாய்ப்பு அதிகமாக இருந்திருக்கும். ஆனால் எதிர்பார்க்கப்பட்ட சூர்யகுமார் யாதவ் 8 ஓட்டங்களில் ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்தார்.
வழக்கமாக சூர்யகுமார் 4வது வரிசையில் களமிறங்குவார். நேற்றைய போட்டியில் அவருக்கு பதிலாக அந்த இடத்தில் தினேஷ் கார்த்திக் களமிறக்கப்பட்டார். போட்டி முடிந்ததும் தினேஷ் கார்த்திக்கின் ஆட்டம் குறித்து சூர்யகுமாரிடம் கேள்வி எழுப்பப்பட்டது.
AP
அப்போது அவர் கூறுகையில், 'சிந்தனை செயல்முறை ஒரே மாதிரியாக இருந்தது, நான் அதை அனுபவிக்க விரும்பினேன். தினேஷ் கார்த்திக்குடன் ஒரு கூட்டணியை அமைக்க வேண்டியிருந்தது.
ஆனால் இன்று (நேற்று) அது வேலை செய்யவில்லை.
தினேஷ் கார்த்திக்கிற்கு சிறிது நேரம் தேவைப்பட்டது. அவர் துடுப்பாட்டம் செய்த விதத்தை பார்க்கும்போது, எனது 4வது வரிசை துடுப்பாட்டத்திற்கு ஆபத்து வந்துவிடும் போல் உள்ளது என நினைக்கிறேன்' என விளையாட்டாக கூறினார்.