15 பந்துகளில் அரைசதம்; ஃபார்முக்கு திரும்பிய சூர்யகுமார் யாதவ்
suryakumar yadav 15 ball half century leads mumbai won: சூர்யகுமார் யாதவின் அதிரடி ஆட்டத்தில், சையத் முஸ்தாக் அலி தொடரில், மும்பை அணி ஹைதராபாத்தை வீழ்த்தியுள்ளது.
சையத் முஸ்தாக் அலி தொடர்
2026 ஆம் ஆண்டின் சையத் முஸ்தாக் அலி தொடர் இன்று தொடங்கி டிசம்பர் 6 ஆம் திகதி வரை நடைபெற உள்ளது.
இதில், இன்று கொல்கத்தாவில் நடைபெற்ற 3வது லீக் போட்டியில், ஹைதராபாத் மற்றும் மும்பை அணிகள் மோதியது.
நாணய சுழற்சியில் வென்ற மும்பை அணி, முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.

இதன்படி, முதலில் துடுப்பாட்டம் ஆடிய ஹைதராபாத் அணி, 20 ஓவர்கள் முடிவில் 10 விக்கெட் இழப்பிற்கு 172 ஓட்டங்கள் குவித்தது.
ஹைதராபாத் தரப்பில் அதிகபட்சமாக, Abhirath Reddy 35 ஓட்டங்கள் குவித்தார். மும்பை வீரர் Maxwell Swaminathan 3 விக்கெட்களை கைப்பற்றினார்.
சூர்யகுமார் யாதவ் அதிரடி
இதைத்தொடர்ந்து, 178 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்குடன் களமிறங்கிய மும்பை அணி 13.1 ஓவர்களில் 3 விக்கெட்களை இழந்து 178 ஓட்டங்கள் குவித்து, 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
அணித்தலைவர் சூர்யகுமார் யாதவ், 21 பந்துகளில் 6 பவுண்டரிகள் மற்றும் 5 சிக்ஸர்கள் உட்பட 60 ஓட்டங்கள் குவித்தார்.
Musheer Khan 24 பந்துகளில் 51 ஓட்டங்கள் குவித்தார். T20 உலககிண்ணத்தை வென்ற இந்திய அணிக்கு தலைமை சூர்யகுமார் யாதவிற்கு, ஃபார்மில் இல்லாததால் அணியில் வாய்ப்பு வழங்கப்படவில்லை.

இந்நிலையில், இன்றைய போட்டியில் 15 பந்துகளில் அரைசதம் விளாசி, ஆட்டநாயகன் விருது வென்று சூர்யகுமார் யாதவ் கவனத்தை ஈர்த்துள்ளார்.