என் ஆட்டம் வேறு மாதிரியாக இருக்கும்! முதல் முறையாக அவுஸ்திரேலியாவில் களமிறங்கும் இந்திய வீரர்
முதல் முறையாக அவுஸ்திரேலியாவில் விளையாட உள்ள சூர்யகுமார் யாதவ்
ஸ்ட்ரைட் ஷாட்களை அடிப்பதற்காக நிறைய ஷாட்களை கற்றுக்கொண்டு வருகிறேன் - சூர்யகுமார் யாதவ்
அவுஸ்திரேலியாவில் நடக்க உள்ள டி20 தொடரில் விளையாட புதிய யுக்தியை கையாள உள்ளதாக இந்திய அணி வீரர் சூர்யகுமார் யாதவ் தெரிவித்துள்ளார்.
உலகக் கோப்பை டி20 கிரிக்கெட் தொடர் அவுஸ்திரேலியாவில் அடுத்த மாதம் தொடங்க உள்ளது. இதற்கான இந்திய அணி சமீபத்தில் அறிவிக்கப்பட்டது. இதில் அதிரடி வீரர் சூர்யகுமார் யாதவ் இடம்பிடித்துள்ளார்.
நடுகள வரிசையில் நிலைத்து நின்று ஆட வேண்டிய பொறுப்பை சூர்யகுமார் யாதவ் கொண்டுள்ளார். ஆனால் அவர் அவுஸ்திரேலிய ஆடுகளங்களில் களமிறங்கியதில்லை.
அவுஸ்திரேலியாவில் பந்துகள் வேகமாகவும், அதிக பவுன்ஸும் ஆகும். எனவே அங்கு பந்துவீச்சை சூர்யகுமார் எப்படி சமாளிப்பார் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
PC: BCCI
இந்த நிலையில் இதுதொடர்பாக பேசியுள்ள சூர்யகுமார் யாதவ் கூறுகையில், 'அவுஸ்திரேலியாவில் முதல் முறையாக களமிறங்கவுள்ளேன். ஆனால் அங்கு எப்படி ஆட வேண்டும், பந்தின் தன்மை எப்படி இருக்கும் என்பது குறித்து ரோகித்திடம் நிறைய கேட்டு தெரிந்து கொண்டேன்.
அதிவேகமான, பவுன்ஸர்களான ஆடுகளங்களில் எனக்கு விளையாட மிகவும் பிடிக்கும். இதற்காக துடுப்பாட்ட ஸ்டைல்களை புதிதாக கற்கவுள்ளேன். அவுஸ்திரேலியாவில் உள்ள மைதானங்களின் அளவு தான் பெரிய சவாலாக இருக்கும்.
அனைத்தும் பெரிய பவுண்டரிகளாக இருக்கும் என்பதால், ஸ்ட்ரைட் ஷாட்களை அடிக்க நிறைய கற்க வேண்டும். ஸ்ட்ரைட் ஷாட்களை அடிப்பதற்காக நிறைய ஷாட்களை கற்றுக்கொண்டு வருகிறேன். அதனை நிச்சயம் ஆட்டத்தின் போது வெளிப்படுத்துவேன்' என தெரிவித்துள்ளார்.
PC: Twitter