தேவைப்படும் போது அவள் இருப்பாள்! நம்பர் 1 இடத்தை பிடித்த சூர்யகுமார் யாதவ் மனைவி பற்றி நெகிழ்ச்சி
என் கிரிக்கெட் வாழ்க்கையின் வெற்றிக்கு மனைவி தேவிஷா தூணாக இருந்திருக்கிறார் என சூர்யகுமார் யாதவ் நெகிழ்ச்சியுடன் கூறியுள்ளார்.
தரவரிசை பட்டியலில் முதலிடம்
டி20 கிரிக்கெட் சிறந்த துடுப்பாட்ட வீரர்கள் தரவரிசையில் இந்திய அணி வீரர் சூர்யகுமார் யாதவ் முதலிடம் பிடித்து அசத்தியுள்ளார். அவர் PTI-ஐக்கு அளித்த பேட்டியில், இன்னும் கனவாகவே இருக்கிறது. உலகின் நம்பர் 1 டி20 பேட்டர் என்று அழைக்கப்படுவதற்கு, ஒரு வருடம் முன்பு யாராவது என்னிடம் இப்படி சொல்லியிருந்தால், நான் எப்படி ரியாக்ட் செய்திருப்பேன் என தெரியவில்லை.
நான் இந்த ஃபார்மட்டை விளையாடத் தொடங்கியபோது சிறப்பான இடத்தை பிடிக்க விரும்பி கடுமையாக உழைத்தேன். என் வாழ்க்கையிலும் இந்த கிரிக்கெட் பயணத்திலும் இரண்டு தூண்கள் துணையாக எனக்கு உள்ளது. மும்பை இந்தியன்ஸ் மற்றும் என் மனைவி தேவிஷா தான் அவை.
சேர்ந்து வளர்த்த கனவு
2016ல், தேவிஷாவுக்கும் எனக்கும் திருமணம் நடந்தது, 2018ல் மும்பை இந்தியன்ஸ் அணியில் சேர்ந்தபோது, அடுத்த லெவலுக்கு செல்ல என்ன செய்ய வேண்டும் என, நானும் தேவிஷாவும் சேர்ந்து யோசிக்க ஆரம்பித்தோம்.
நாங்கள் இருவரும் சேர்ந்து வளர்த்த கனவு இது, எனக்கு அவள் தேவைப்படும்போது எப்போதும் என்னை சுற்றியே இருப்பாள். ஒரு விளையாட்டு வீரராக எனக்குத் தேவையான சமநிலையை தேவிஷா கொண்டு வருகிறார் என கூறியுள்ளார்.