சிக்ஸர் மழை பொழிந்த சூர்யகுமார் யாதவ்: 49 பந்தில் முதல் சதம் விளாசல்
குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிரான போட்டியில், மும்பை அணி வீரர் சூர்யகுமார் யாதவ் அதிரடியாக முதல் சதம் விளாசினார்.
அதிரடி காட்டிய ரோகித் சர்மா
மும்பை இந்தியன்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகளுக்கு எதிரான ஐபிஎல் போட்டி வான்கடே மைதானத்தில் நடந்து வருகிறது. முதலில் துடுப்பாடிய மும்பை அணியில் ரோகித் சர்மா 18 பந்துகளில் 29 ஓட்டங்களும், இஷான் கிஷன் 20 பந்துகளில் 31 ஓட்டங்களும் விளாசினார்.
Na dare,
— Mumbai Indians (@mipaltan) May 12, 2023
Na basic batting kare.
Wo Surya Dada hai,
Idhar ka ball udhar maare, jab man kare.#OneFamily #MIvGT #MumbaiMeriJaan #MumbaiIndians #IPL2023 @surya_14kumar pic.twitter.com/JVL7aXfAEX
பின்னர் களமிறங்கிய சூர்யகுமார் யாதவ் ருத்ர தாண்டவம் ஆடினார். மறுமுனையில் நேஹால் 15 ஓட்டங்களிலும், விஷ்ணு வினோத் 30 ஓட்டங்களிலும் ஆட்டமிழந்தனர்.
சூர்யகுமார் முதல் சதம்
இறுதிவரை களத்தில் இருந்த சூர்யகுமார் யாதவ் தனது முதல் ஐபிஎல் சதத்தினை பதிவு செய்தார். அவர் 49 பந்துகளில் 6 சிக்ஸர், 11 பவுண்டரிகள் அடித்தார். இதன்மூலம் மும்பை இந்தியன்ஸ் அணி 5 விக்கெட் இழப்புக்கு 218 ஓட்டங்கள் குவித்தது. ரஷீத் கான் 4 விக்கெட்டுகளும், மோகித் சர்மா ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர்.
அதன் பின்னர் களமிறங்கிய குஜராத் அணி 5 விக்கெட் இழப்புக்கு 100 ஓட்டங்கள் எடுத்துள்ளது. மில்லர் 41 ஓட்டங்களுடனும், திவாட்டியா 14 ஓட்டங்களுடனும் களத்தில் உள்ளனர்.