அதிரடியான ஆட்டத்தினால் பாகிஸ்தான் கேப்டனை பின்னுக்கு தள்ளிய சூர்யகுமார் யாதவ்! மேலும் ஒரு சாதனைக்கு காத்திருப்பு
டி20 கிரிக்கெட் தரவரிசையில் ரிஸ்வான் முதல் இடத்திலும், சூர்யகுமார் யாதவ் மற்றும் பாபர் அசாம் முறையே இரண்டு, மூன்றாம் இடங்களில் உள்ளனர்
தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான இன்றைய போட்டியில் சூர்யகுமார் யாதவ் 8 ஓட்டங்கள் எடுத்தால், ஒரு காலண்டர் ஆண்டில் அதிக ஓட்டங்கள் எடுத்த ஷிகர் தவானின் சாதனையை முறியடிப்பார்
இந்திய கிரிக்கெட் வீரர் சூர்யகுமார் யாதவ் டி20 கிரிக்கெட்டில் இரண்டாவது இடத்திற்கு உயர்ந்துள்ளார்.
அவுஸ்திரேலியாவுக்கு எதிரான டி20 தொடரில் இந்திய அணி வீரர் சூர்யகுமார் யாதவ் சிறப்பான ஆட்டத்தினை வெளிப்படுத்தினார்.
முதல் போட்டியில் 25 பந்துகளில் 46 ஓட்டங்கள் (4 சிக்ஸர், 2 பவுண்டரிகள்) விளாசிய அவர், இரண்டாவது போட்டியில் முதல் பந்திலேயே ஆட்டமிழந்தார்.
BCCI
எனினும் கடைசி போட்டியில் ருத்ர தாண்டவம் ஆடிய சூர்யகுமார், 36 பந்துகளில் 69 ஓட்டங்கள் எடுத்தார். இதில் 5 சிக்ஸர் மற்றும் 5 பவுண்டரிகள் அடங்கும். அவரது அதிரடி ஆட்டத்தினால் தனிநபர் புள்ளிகள் உயர்ந்தது.
மொத்தம் 801 புள்ளிகளை பெற்ற சூர்யகுமார் யாதவ், டி20 தரவரிசைப் பட்டியலில் நான்காவது இடத்தில் இருந்து 2வது இடத்திற்கு முன்னேறியுள்ளார். அத்துடன் இரண்டாவது இடத்தில் இருந்த பாகிஸ்தான் கேப்டன் பாபர் அசாமை (799) பின்னுக்கு தள்ளியுள்ளார்.
AFP