379 ஓட்டங்கள்..49 பவுண்டரிகள்..இந்திய வீரரின் துடுப்பாட்டத்தை பார்த்து வியந்த சூர்யகுமார் யாதவ்
ரஞ்சிக்கோப்பை போட்டியில் பிரித்வி ஷா 379 ஓட்டங்கள் விளாசி மிரட்டினார்.
ருத்ரதாண்டவ ஆட்டம்
இந்திய அணி வீரர் பிரித்வி ஷா ரஞ்சிக்கோப்பை தொடரில் மும்பை அணியில் விளையாடி வருகிறார். நேற்று தொடங்கிய அசாம் அணிக்கு எதிரான போட்டியில் மும்பை அணி தனது முதல் இன்னிங்சில் 687 ஓட்டங்கள் குவித்து டிக்ளேர் செய்தது.
தொடக்க வீரராக களமிறங்கிய பிரித்வி ஷா 383 பந்துகளில் 379 ஓட்டங்கள் விளாசினார். அவரது முச்சத்தில் 4 சிக்ஸர், 49 பவுண்டரிகள் அடங்கும்.
@PTI
பிரித்வி ஷாவின் சாதனை
இதன்மூலம், ரஞ்சிக்கோப்பை தொடரில் மும்பை அணிக்காக அதிக ஓட்டங்கள் விளாசிய வீரர் என்ற பெருமையை பிரித்வி ஷா பெற்றார்.
அதேபோல், ரஞ்சிக்கோப்பையில் 350 ஓட்டங்களுக்கு மேல் குவித்த 9வது வீரர் பிரித்வி ஷா ஆவார். மும்பை அணியின் கேப்டன் ரஹானே 191 ஓட்டங்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.
இந்த நிலையில் பிரித்வி ஷாவை பாராட்டி சூர்யகுமார் யாதவ் ட்வீட் செய்துள்ளார். அவரது ஆட்டத்தைப் பார்த்து வியந்த அவர், இது பைத்தியக்காரத்தனமான ஆட்டம் என புகழ்ந்துள்ளார்.
??????? ????.
— Surya Kumar Yadav (@surya_14kumar) January 11, 2023
???.
???????.
? pic.twitter.com/3AhZv0ipwZ